”ஏய்” என கத்த அவளோ
”என்னைப் பார்த்த உன் கண்ணை நோண்டிடுவேன்”
”இப்ப மட்டும் வீரமா பேசு, அப்பவே பயந்து போய் பல்லி மாதிரி என்கிட்ட வந்து ஒட்டிக்கிட்ட அப்ப எங்க போச்சி உன் வீரம்”
”உனக்காக நான் ஏன் சாகனும், இப்பவும் எனக்கு தைரியமிருக்கு, நீதான் பயந்து போய் குப்பைத் தொட்டி பக்கத்தில ஒளிஞ்சிட்டு உட்கார்ந்திருக்க, இங்க நாறுது வேற, என்னால நிம்மதியா மூச்சு கூட விடமுடியலை, அவனுங்க உன்னை சாகடிக்கறதுக்குள்ள நீயே என்னை சாகடிச்சிடுவ போல இருக்கு, இதுல நீ தாதான்னு வேற சொல்லிக்கற சே கேவலமா இருக்கு” என சொல்ல
”தாதான்னா வேற எப்படியிருக்கனும்னு நினைச்ச“
”சினிமால காட்டற மாதிரி வீரமா எதிர்த்து நின்னு போராடி சாகனும்“
”அப்ப கூட நான் வாழனும்னு சொல்லமாட்டியே“
”சொல்ல மாட்டேன், கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவுன்னு சொல்வாங்க, நீ துப்பாக்கி எடுத்தல்ல பார்த்துக்கிட்டே இரு உனக்கு துப்பாக்கியாலதான் சாவு வரும்” என சபித்தாள்
”வந்ததில இருந்து என்னை சபிக்கறதிலையே இருக்கியே நல்லதா ஒரு வார்த்தை பேச மாட்டியா”
”நீ நல்லவனா இருந்தா பேசுவேன், நீதான் கெட்டவனாச்சே“
”என்னைக் கெட்டவனா ஆக்கினதே இந்த சமூகம்தான்”
”நீ தப்பிக்க சமூகத்தை காரணம் காட்டாத, உனக்கு தைரியம் இருந்தா போ தைரியமா எதிரிக்கிட்ட போய் சண்டை போட்டு உன்னை காப்பாத்திக்க, இங்க உட்கார்ந்து வெட்டியா பேசாத