”ஏய் அறிவிருக்கா உனக்கு, இப்ப உன்னை விட்டா நீ செத்துடுவ வந்தவனுங்க போலீஸ் கிடையாது, என் எதிரிங்க கருணாவோட ஆளுங்க, அவங்களுக்கு நான் சாகனும்னு முடிவோட வந்திருக்கானுங்க, இதுல யார் செத்தாலும் அவங்க கவலைப்படமாட்டாங்க, ஏற்கனவே அவங்க ஆளுங்க 5 பேரையும் பிடிச்சி வைச்சிருக்கேன், அந்த கோபத்தில இருக்கானுங்க அமைதியா இங்கயே இரு, இப்ப போனா பொண்ணுன்னு கூட பார்க்காம உன்னைக் கொன்னுடுவானுங்க பேசாம இரு”
”அதுக்குன்னு இப்படியா இறுக்கி பிடிப்ப எனக்கு வலிக்குது விடு”
”முடியாது எனக்கு ஒண்ணும் உன் மேல ஆசையில்லை, உன்னை காப்பாத்தனும்னு பிடிச்சி வைச்சிருக்கேன் அலட்டிக்காத”
”ஆஆஆ வலிக்குதுடா விடுடா” என கத்த அவனோ
”விடறேன் ஆனா எழுந்து ஓடக்கூடாது இங்கதான் இருக்கனும், மறைவில இருக்கனும் புரியுதா“
”என்ன இடம் இது இங்க உட்காரவே முடியலை நாத்தமடிக்குது”
”ஓ இதுவா இது குப்பைத்தொட்டியோட பின்பக்கம்“
”அய்யே சீ உனக்கு மறைஞ்சிக்கறதுக்கு வேற இடம் கிடைக்கலையா“
”உயிரை காப்பாத்தற நேரத்தில எந்த இடம் கிடைக்குமோ அங்கதான் ஒளிய முடியும், இதுக்காக என்ன ஸ்டார் ஓட்டலுக்கா போக முடியும், கொஞ்ச நேரம்தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கயேன்” என சொல்ல அவளோ
”நான் நல்லவள் நான் ஏன் ஒளிஞ்சிருக்கனும், நீதான் கெட்டவன் நீயே இங்க இரு, என்னால இங்க இருக்க முடியலை, நான் போறேன்”