(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“சும்மா தான் அண்ணி... உங்க சமையல் சாப்பிடனும்னு ஆசையா இருந்துச்சு,” என்றான்.

   

பேசி முடித்தானோ இல்லையோ, அவனின் கண்கள் தானாக மீண்டும் நந்திதாவிடமே சென்றது!

   

அதை துளசி, ப்ரியா இருவருமே கவனித்தார்கள்!

   

துளசியின் உதட்டில் புன்னகை வந்தது! “என் சமையல் சாப்பிட உங்களுக்கு ஆசை???? இருக்கும் இருக்கும்... உங்களை பார்த்தாலே அப்படி தான்னு தெரியுதே.... ஏதோ ஷர்ட் போட்டுட்டு வந்தீங்களே சந்தோஷம்,” என்றாள் துளசி கேலியாக.

   

அது வரை அமைதியாக நின்றிருந்த ப்ரியா,

   

“ஷர்ட்டா??? ஏன் அப்படி சொல்றீங்க???” எனக் கேட்டாள் ஆர்வம் மின்ன.

   

ப்ரியா யார் என்பது புரியாதததால், ‘இவள் யார்’ என்பது போல உதயை பார்த்தாள் துளசி.

   

அதுவரை உதயின் அருகே நின்றிருந்த ப்ரியாவை கவனிக்காமல் இருந்த நந்திதாவும், அப்போது தான் ப்ரியாவை பார்த்தாள்.

   

ப்ரியாவின் சிம்பிளான அழகும், அழகுக்கு அழகு சேர்த்த புன்னகையும், நந்திதாவினுள் மெல்லிய பொறாமை உணர்ச்சியை தூண்டியது. கூடவே, அவள் உதயுடன் தான் வந்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்த பொறாமைக்கு எக்ஸ்ட்ரா தூபம் போட்டது!

   

கடமையே கண்ணாக நந்திதாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த உதய், நந்திதா ப்ரியா பக்கம் பார்த்த பார்வையை கவனிக்க தவறவில்லை!

   

சட்டென ஒரு எண்ணம் தோன்ற, ப்ரியாவின் அருகே சென்று நின்றவன், துளசியிடம்,

   

“என்ன அண்ணி உங்களுக்கு ப்ரியாவை தெரியலையா??? எவ்வளவு பாப்புலர் ஃபிகர் இவ,” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.