ஆனாலும் தில்லையின் கோபம் குறையவில்லை, மூவரையும் பார்த்தான், தனது துப்பாக்கியை அவர்கள் பக்கம் நீட்டினான். சிறிதும் யோசிக்காமல் அவர்களின் முட்டிக்காலில் குறிபார்த்து 3 முறை சுட்டதில் மூவருக்கும் பலத்த அடி பட்டது, நிற்க முடியாமல் நொண்டினார்கள். அவர்களைக் கண்டதும் தில்லை உடனே
”இவனுங்களை பிடிச்சி கட்டுங்கடா, இனி எவன் வரான்னு நானும் பார்க்கறேன்“ என கத்த அதில் அவர்களும் அந்த மூவரையும் அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்றார்கள்.
தில்லையும் சுற்றி முற்றிப் பார்த்தான்
”இன்னும் எவனாவது இருந்தா வாங்கடா முன்னாடி” என அழைக்க யாரும் வரவில்லை எதற்கும் அவனது ஆட்கள் அந்த ஏரியா முழுவதும் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து
”அவ்ளோதாண்ணா யாருமில்லை” என சொல்ல அதற்கு தில்லையோ
”அந்த கருணா என்னை சாதாரணமா நினைச்சிட்டான், பேருக்கு 8 பேரை அனுப்பி என்னை கொல்ல நினைக்கறான்ல அவனை நாம விடக்கூடாது கிளம்புங்கடா, அவனை இன்னிக்கு போட்டுத்தள்ளிட்டுதான் வரனும் ம் கிளம்புங்க” என உத்தரவிட யாருமே அசையவில்லை அதைக் கண்ட தில்லையோ
”என்னடா நிக்கறீங்க ஓ பயந்துட்டீங்களா சரி விடுங்க, நானே போய் பார்த்துக்கறேன் அந்த கருணாவா நானான்னு ஒரு கை பார்க்கறேன்” என சொல்லி முடிப்பதற்குள் சம்யுக்தா அவனது இன்னொரு கையை பிடித்துக் கொள்ள அப்போதுதான் அவளையே பார்த்தான். அவனது ஆட்களோ
”எங்களுக்கு பயமில்லைண்ணா நாங்க வர்றோம் ஆனா இவங்களை என்ன செய்றது” என கேட்க அவனோ சம்யுக்தாவை பார்த்தான்
”என்னை விடு, முக்கியமான வேலையா போறேன், போய் வந்து உன்கிட்ட பேசறேன் விடு