என்னை”
”என்ன செய்யப் போற நல்லதா செய்யப் போற, உன்னை கொல்ல வந்தவனை நீ கொல்லப்போற, அவ்ளோதானே இதுவா முக்கியமான வேலை, இப்ப நான்தான் உனக்கு முக்கியம் எனக்கு நியாயம் சொல்லிட்டு கிளம்பி போ” என அவள் சொல்ல அவனுக்கு சலிப்பே வந்தது.
”எந்த இடத்தில நின்னு நியாயம் கேட்கற நீ, பார்த்தல்ல என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு, என் ஏரியாவுக்கே கருணா தன் ஆளுங்களை அனுப்பியிருக்கான் எப்படி அவனை சும்மா விடறது, நான் போய் அவனை போட்டுட்டு வந்துடறேன் அப்புறம் ஆர அமர நாம பேசிக்கலாம்“
”அது முடியாது நீ போற இடத்தில செத்துட்டா எனக்கெப்படி நியாயம் கிடைக்கும், எனக்கான நியாயத்தை கொடுத்துட்டு நீ போய் சாவு” என்றாள் அதைக் கேட்டவன்
”எனக்கு மரணமே கிடையாது நான் நினைச்சாதான் மரணம் என்னைத் தேடி வரும், நீ சொன்னாலும் நான் சாக மாட்டேன், கண்டிப்பா வருவேன் வந்து உனக்கான நியாயத்தை நான் வழங்கறேன் இப்ப விடு என்னை“
”முடியாது நான் விடமாட்டேன், எனக்கு நியாயம் சொல்லிட்டு போ” என சொல்ல அவனது அடியாட்களோ
”அண்ணா சட்டுபுட்டுன்னு பேசி முடிச்சிட்டு வாங்கண்ணா நேரமாகுது, கருணா இன்னொரு முறை ஆளுங்களை இறக்கிடப் போறான் அண்ணா சீக்கிரம்” என துரிதப்படுத்த சித்தனோ
”அண்ணா அவங்க கேட்கற நியாயத்தைதான் கொடுத்துட்டு வாயேன், அதை ஏன் நீயே வைச்சிருக்கற” என சொல்ல
”எதைடா”
”உன் கையில பாரு” என சொல்ல அவனும் பார்த்தான் துப்பாக்கி பிடித்திருந்த கையில் தாலியிருந்தது, இது எப்படி என நினைத்தபடியே தாலியை கழட்ட அது துப்பாக்கியுடன் சேர்ந்து சுற்றிக் கொள்ள மெல்ல அதில் இருந்து தாலியை விடுவிக்க முயன்றான், தாலியோ அவனது