Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 20 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
அந்த ரிங் டோன் கேட்டதும் சிவாவிற்கு கோபம் வந்தது
”டேய் முதல்ல அந்த ரிங்டோனை மாத்துடா, ரிங்டோனும், காலர் ட்யூனும் இதையே வைச்சிக்கிட்டு நீ செய்ற அட்டூழியம் இருக்கே தாங்கலை”
”உனக்கென்ன பிரச்சனை அதான் பணம் கொடுத்துட்டேன்ல, வந்த வேலையை முடிச்சிட்டு இடத்தை காலி பண்ணு, கிளம்பு எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என சொல்ல அவனும் உடனே எழுந்தான். அங்கிருந்த சம்யுக்தாவோ அவர்களின் உரையாடல்களைக் கேட்டதில் போலீஸிடம் உதவி நாடுவது தவறு என புரிந்துக் கொண்டவள் சிவாவையும் செந்திலையும் கேவலமாகப் பார்த்தாள்.
அவளின் பார்வையைக் கண்ட சிவாவோ
”ஹாய்” என்றான் அவளோ அவனை கோபமாக முறைத்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்ள அவனோ தில்லையை பார்த்து
”என்னடா செஞ்ச இவளை“
”இன்னும் எதுவும் செய்யலை, இனிமேலதான் ஏதாவது செய்யனும்“
”அவளை அனுப்பாம வைச்சிருக்க அறிவில்லை உனக்கு”
”அவளுக்குதான் அறிவில்லை, நான் போகச் சொல்லியும் கேட்காம உட்கார்ந்திருக்கா”