(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

பார்க்கறதுதானே, வந்து கூட பேசிக்கயேன், அவங்க எங்க போக போறாங்க, உன்கூடதானே இருப்பாங்க” என சொல்ல அவனுக்கு திக்கென்றது.

   

அவனோ சம்யுக்தாவிடம்

   

”இதப்பாரு நீ இங்க இருக்க இருக்க பார்க்கறவங்க உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சிப் பேசுவாங்க, முதல்ல இந்த அலங்காரத்தை மாத்து என்னால தாங்கவே முடியலை”

   

”இதப்பாரு பேச்சை மாத்தாத, ஒழுங்கா எனக்கான நியாயத்தை சொல்லு அப்புறம் உன் வழி தனி, என் வழி தனி” என சொல்ல சித்தனோ பொறுமையை இழந்தான்

   

”அண்ணா இப்ப வர்றியா இல்லையா நாங்களே போய்டுவோம் கிளம்பு” என கத்த அதற்கு தில்லையோ

   

”இருங்கடா வர வர எவனும் என் பேச்சைக் கேட்க மாட்டேங்கறானுங்க, இவளுக்கு நியாயத்தை சொல்லிட்டு வரேன்டா“

   

”எல்லாம் கருணாவை கொன்னுட்டு கூட வந்து இவங்களுக்கு நியாயத்தை வழங்கிக்க யார் வேணாம்னா, இப்ப கிளம்பு நம்ம ஆளுங்க எல்லாரும் ரெடியா இருக்கானுங்க, கொலை வெறியோட இருக்கானுங்க இப்ப மட்டும் நீ வரலை எல்லாருக்கும் ஏமாற்றமா போயிடும், உடனே கிளம்பு” என சொல்ல வேறு வழியில்லாமல் தில்லையும் சரியென்றான்.

   

உடனே எழுந்து நிற்க அவளும் எழுந்து நின்றாள். அதைக் கண்ட தில்லைக்கு சிரிப்பே வந்தது. சிரித்தபடியே அவன் முன்னால் செல்ல அவளும் அவனுடனே சென்றாள்.

   

”என்னை நீ விடமாட்டியா”

   

”எனக்கு நியாயம் வழங்கமாட்டியா”

   

”சந்தோஷம் வா வா உனக்கு சேம்பிள் காட்டினேன், புரியலை வா மெயின் பிக்சர் ஓட்டறேன், அதுல நீ தலைதெறிச்சி ஓடிடுவ”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.