(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”இது ஆபத்து, அவளை அனுப்பிடு அதான் உனக்கு நல்லது, பெண் பாவம் பொல்லாதுடா”

   

”அதை நீ சொல்லாத கிளம்பு, நான் பார்த்துக்கறேன்” என சொல்ல அவனோ செந்திலை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டே சென்றுவிட்டான். அவர்கள் சென்றதும் தில்லையோ சம்யுக்தாவிடம்

   

”பார்த்தியா போலீஸ் கூட எனக்குத்தான் உதவி செய்யும், நீ வேற போலீஸ்கிட்ட போனாலும் எனக்கு கவலையில்லை, பணத்தை கொடுத்து எல்லாரையும் என் வழிக்கு கொண்டு வருவேன், நான் எங்கயாவது போகனும்னு சொன்னா போதும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு தரும் அந்தளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கு, இப்பவாவது என்னையும் என் பலத்தையும் புரிஞ்சிக்கிட்டியா, இதுவே சேம்ப்பிள்தான் இது போதும் உனக்கு, இப்பவாவது நீ கிளம்பறியா” என கேட்க அவளோ 

   

”முடியாது நீ கொடுக்கற பணத்துக்கு ஆசைப்பட்டு போலீஸ் உன்கிட்ட வந்து நிக்கறாங்க, சல்யூட் பண்றாங்க, நீ கெட்டவன்னு தெரிஞ்சும் கைது செய்யாம விட்டுட்டு போறாங்க, அவங்க எல்லாம் நல்லவங்களே இல்லை, உன்கூட சகவாசம் வைச்சிருக்கற ஆளுங்க எல்லாருமே மோசமானவங்கதான் இவங்களைப் பார்த்து நான் ஏன் பயப்படனும், எனக்கு எந்த பயமும் இல்லை, நீ கோடி கோடியா கொட்டினாலும் சரி எனக்கான நியாயத்தை நீ வழங்கற வரைக்கும் இங்கிருந்து நான் போக மாட்டேன்” என்றாள் உறுதியாக 

   

அங்கிருந்த சித்தனோ

   

”அண்ணா வாண்ணா நேரமாகுது போகலாம், இன்னிக்காவது அந்த கருணாவை போட்டுடலாம், எத்தனை நாள்தான் அவனுக்காக ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கிறது”

   

”இருடா இப்பதானே ஒரு கன்ஷுட் ஆச்சி, இதுல இவள் வேற என்னை விட மாட்டேங்கற, பொறு, இவள்ட்ட பேசிக்கிட்டு இருக்கேன்ல பேசி ஒரு முடிவு எடுத்ததும் வரேன்” 

   

”இவங்க கேட்கறது நியாயம், அது உனக்கு தரவராது, என்னதான் பேசினாலும் உன்னால எந்த முடிவையும் எடுக்க முடியாதுண்ணா, வாண்ணா டைம் ஆகுது இதெல்லாம் எப்பவும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.