(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

“பார்க்கலாம் ஒருத்தனை கொல்லதானே போற, அதுக்கு ஏன் இவ்ளோ வீரமா வசனம் பேசற, என்னவோ நீ பெரிய ஆர்மி ஆபிசர் போல நினைப்பாக்கும், போய் தொலை” என அவள் விரட்ட அவனோ 

   

”என்ன நீ என்னையே விரட்டற, என்மேல இருக்கற பயம் விட்டுப் போச்சா உனக்கு, அவ்ளோ துணிச்சல் வந்துடுச்சா இரு இரு, உனக்கு மரண பயம்னா என்னன்னு காட்டறேன் வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

   

தெருவில் அவனுக்காக ஆட்கள் தயாராக நின்றுக் கொண்டிருந்தார்கள், அனைவரின் பார்வையிலும் ஒரு ஆர்வம் இருந்தது. அதைக் கண்ட தில்லையோ

   

”இன்னிக்கி பெரிய சம்பவம் செய்யப் போறோம், இதுல நாம சொதப்பிடக்கூடாது, நேரா போறோம் கருணாவை போடறோம், அவனுக்காக எவன் எதிர்த்து வந்தாலும் சரி யார் என்னன்னு கூட பார்க்க வேணாம், அவனுங்களையும் போட்டுடலாம் எல்லாரும் ரெடிதானே”

   

என கேட்க அவர்களும்

   

”ரெடி” என்றார்கள்

   

”நான் கருணாவை பார்த்துக்கறேன், நீங்க அவனோட அடியாளுங்களை பார்த்துக்குங்க, ரொம்ப நேரம் எடுத்துக்க வேணாம், போலீஸ்க்கு விவரம் தெரிஞ்சா நமக்கு ஆபத்து, சட்டு புட்டுன்னு வேலையை முடிச்சிடனும், அங்க வேலையானதும் நீங்க எல்லாரும் கலைஞ்சிப் போயிடுங்க, 2 நாள் கழிச்சி இங்க வந்தா போதும், யாருக்கும் உங்க மேல சந்தேகம் வரக்கூடாது புரியுதா”

   

”புரியுதுண்ணா”

   

”அப்புறம் அவன் வேற இடத்தில ஒளிஞ்சிக்கிட்டான்னு சிவா இப்பதான் தகவல் சொன்னான்”

   

”அந்த இடம் எதுன்னு எங்களுக்கு தெரியும்ணா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.