"நீங்க இன்னைக்கே ஊருக்கு கிளம்புறீங்களா?" என தலையை நிமிர்த்தி குழப்பத்துடன் சத்யாவிடமே கேட்டாள் தேன்மொழி.
தலையை மறுப்பாக அசைத்து, "இல்லை, ஒரு பர்சனல் வேலை இருக்கு... அதை முடிச்சுட்டு நாளைக்கு கிளம்புறேன்," என்றான் சத்யா!
"ஓ! அப்போ நீங்களும் நாளைக்கு உங்க ஆஃபிஸ்க்கு லீவா?"
"நானா??? ஹுஹும்... லீவ் எல்லாம் இல்லை! இங்கே எங்க சென்னை ப்ராஞ்ச்ல முக்கியமான வேலை இருக்கு... மதியம் மேல் அம்மா சொந்தக்காரங்க வீட்டுக்கு போகனும்னு சொல்லி இருக்காங்க... அதை தான் சொன்னேன்..."
ஓ! இவனுக்கு எந்த வீடு என்று தெரியாதோ? ஆனால் ஏன்?
தேன்மொழி யோசனையில் இருக்க,
"உங்களுக்கு உடம்புக்கு ஒன்னுமில்லையே தேன்மொழி?" என அக்கறையுடன் மீண்டும் விசாரித்தான் சத்யா.
"அதெல்லாம் ஒன்னுமில்லை... நான்... உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்... நான்... அன்னைக்கு உங்களை பிடிக்கலைன்னு... சொன்னதுக்கு... காரணம்..."
அவள் இழுத்து இழுத்து பேசுவதன் நடுவே குறுக்கிட்டு,
"காரணம், உங்களுக்கு உங்க வேலை மேல இருக்கும் ஈடுபாடு தானே? நானே புரிஞ்சுக்கிட்டேன்... அது பரவாயில்லை தேன்மொழி..."
"சாரி...!!! எங்க வீட்டுல எல்லோருக்கும் நான் அப்போ உங்களை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்னு ரொம்ப வருத்தம் தான்... ஆனாலும் நான் கல்யாணம் செய்துக்க கொஞ்சம்