(Reading time: 7 - 14 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

டைம் வேணும்னு கேட்டதால சரின்னு ஒத்துக்கிட்டாங்க... இதை எல்லாம் உங்க கிட்ட நேரா சொல்லி சாரி கேட்கனும்னு நிறைய நாள் நினைச்சிருக்கேன்..."

   

"சாரி எல்லாம் எதுக்கு? பழைய விஷயத்தை விடுங்க… ஆமாம் நாளைக்கு எதுக்கு லீவ்? என் கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க..."   

   

சட்டென தேன்மொழியின் கண்கள் மின்னியது! அவள் உதட்டில் காணாமல் போயிருந்த புன்னகையும் மீண்டும் தோன்றியது!

   

“உங்க கிட்ட சொல்லாம என்ன மிஸ்டர் சத்யா... நாளைக்கு... வேறென்ன, நம்ம ஊருல எப்போவும் நடக்கும் பெண் பார்க்கும் படலம் தான்..."

   

"வாட்????"

   

வியப்பும், கோபமுமாக ஒலித்த சத்யாவின் அந்த கேள்வியில் தேன்மொழியின் மனம் மகிழ்ந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சத்யாவைப் பார்த்தாள்... 

   

அவள் கேள்வியாய் பார்ப்பதை புரிந்துக் கொண்டவன், அவசரமாக யோசித்து,

   

"இதெல்லாம் இன்னமும் இருக்கா என்ன? நீங்க ஏன் தேன்மொழி இதுக்கு சம்மதிச்சீங்க? இதெல்லாம் நல்ல விஷயமே கிடையாது..." என்றான்.

   

"ப்ச்... இவ்வளவு நாள் என் வீட்டுல எல்லோரும் என் பேச்சை கேட்டாங்க, இது அவங்களுக்காக," என்றாள் தேன்மொழி அவனை ஆர்வத்துடன் பார்த்தபடி...

   

சத்யாவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை!

   

அவனால் அவளை தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக நினைத்து பார்க்க கூட முடியும் என்றும் தோன்றவில்லை! இதை எப்படி அவளிடம் சொல்வது என்று குழம்பினான்.

   

ஆனால் இப்போதே சொல்லாமல் இருப்பதும் சரி இல்லை என்றும் தோன்றியது... ஒருவேளை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.