(Reading time: 7 - 14 minutes)
Engeyo partha mayakkam
Engeyo partha mayakkam

அவள் சொல்லும் பெண் பார்க்கும் படலத்தில் வருபவனுக்கு அவளை பிடித்து விட்டால்...

   

மேலே யோசிக்கவும் பிடிக்காமல், "தேன்மொழி, இதுக்கு மேல் மறைச்சு வச்சு பிரயோஜனமில்லை... என்னால உங்களைத் தவிர வேற யாரையும் என் மனைவியா நினைச்சுக் கூட பார்க்க முடியாது...! நாளைக்கு ப்ளான் செய்திருக்க பெண் பார்க்கும் படலம் எல்லாம் வேண்டாமே... என்னை முதல்ல கன்சிடர் செய்ங்க... மூணு வருஷம் முன்னாடி உங்களுக்கு ஒரு காரணம் இருந்தது... ஆனால் இப்போ அப்படி எதுவுமில்லையே..." என படபட என மனதில் இருப்பதை ஒப்பித்தான் சத்யா!

  

இப்படி அவன் நேரடியாக பேசுவான் என்று எதிபார்த்திராத தேன்மொழி ஒரு வினாடி திகைத்து தான் போனாள்! ஆனால் சத்யாவின் முகத்தில் இருந்த குழப்பமும், பதற்றமும் அவனின் மனதை அவளுக்கு புரிய வைத்தது! மனம் குளிர, அவளின் மனம் தானாக இயல்புக்கு திருப்பியது!

   

சத்யா எவ்வளவு பெரிய நிறுவனத்தின் தலைவன்! எப்போதும் மிடுக்குடன் காட்சி தருபவன்! இப்படி குழப்பமும், பதற்றமுமாக அவளிடம் கெஞ்சுகிறான்... ஆச்சர்யமாக இருந்தாலும், அவளுக்கு அவனை அப்படி பார்க்க பிடிக்கவில்லை...

   

ஆனால், சத்யாவின் அம்மா எதற்காக அவனிடம் உண்மையை சொல்லவில்லை என்பது தெரியாமல் அதைப் பற்றி பேசுவது சரி இல்லை என்றும் அவளுக்குத் தோன்றியது... அதற்காக சத்யாவை இப்படியே வருத்தப்பட விடவும் அவளுக்கு மனம் வரவில்லை...

   

"எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலைங்க சத்யா... நான் நாளைக்கு பதில் சொல்லட்டுமா?” என்றாள்.

   

"கண்டிப்பா! உங்களுக்கு எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க.. உங்களை நான் கட்டாயப் படுத்த முடியாது... ஆனால், எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்க கூட மட்டும் தான்..."

   

வேகமாக பேசியவனை இமைக்காமல் பார்த்தப் படி அமர்ந்திருந்தாள் தேன்மொழி! அவளின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.