முகத்தில் இருந்த புன்னகை தானாகவே பெரிதானது!
✽✽✽
ஈஸ்வரி மெதுவாக பக்கத்தில் இருந்த சத்யாவை பார்த்தாள். மகனின் முகத்தில் இருந்த சிடுசிடுப்பு அவளுக்கு கவலையை கொடுத்தது!
தேன்மொழி வீட்டிற்கு போவதாக சொன்னால் அவன் வருவானோ மாட்டோனோ என்று தான் அவனிடம் முழு விவரத்தை சொல்லாமல் மறைத்திருந்தாள்!
தேன்மொழியை பார்த்தாவது இவன் மனம் மாறாதா என்று அவளுக்கு ஆதங்கமாக இருந்தது...
✽✽✽
சத்யாவின் கண்கள் வினாடிக்கு ஒருமுறை அவனின் செல்ஃபோன் பக்கம் சென்று வந்துக் கொண்டே இருந்தது. தேன்மொழி அவனுடைய நம்பரை வாங்கிக் கொண்டு, அவளின் பதிலை அவனின் மொபைலுக்கு அனுப்புவதாக சொல்லி இருந்தாள்.
ஒரு பெண்ணின் பதிலுக்காக இத்தனை தவிக்கிறோமே, என்று தோன்றிய எண்ணத்தை உடனேயே அடக்கினான்... தேன்மொழி ஒன்றும் சாதாரண பெண் இல்லை.. தேவதை... அவனுடைய தேவதை... அவனுக்காகவே பிறந்த தேவதை!
யாரென்று தெரியாத அந்த உறவினர் வீட்டு வாசலில் வரவேற்ற இளைஞனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாமல் கையிலிருந்த ஃபோனையே பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா! அதை கவனித்த அந்த இளைஞன்,
"வீட்டுக்குள்ளே மொபைல் சிக்னல் கொஞ்சம் சரியா வராது... அந்த பக்கம் இருக்க தோட்டத்துப் பக்கமா போனால் நல்லா சிக்னல் வரும்..." என்றான்.
அதற்கு மேல் சத்யா ஏன் வீட்டிற்குள் போகிறான்!!!