பொண்ணு ப்ரியாவை பார்த்து அப்படியே குடுகுடுன்னு உள்ளே ஓடி வந்துட்டீங்க!!!”
“அவளுக்கும் நான் வந்ததுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. எனக்கு அங்கே குளிர்ந்துச்சு நான் வந்தேன்...”
“அநியாயம் பண்றீயே நந்து!”
“என்ன?”
“சென்னைல குளிருதுன்னு சொல்றீயே!!! உனக்கே இது ரொம்ப ஓவரா தெரியலை?”
“எனக்கு குளிர்ந்துச்சு உனக்கு இல்லைனா நான் என்ன செய்ய?”
“ஒன்னுமே செய்ய முடியாது... நான் வேணா அந்த ஷர்ட் போடாமல் சுத்துற உன் ஹீரோவை கூப்பிட்டு என்ன செய்றதுன்னு கேட்கவா?”
“அடியே, அடங்கவே மாட்டீயா நீ? அவர் நம்ம ஜூனியர்!”
“ஹா ஹா ஹா...”
“ஒசிமம்!!! எதுக்கு இப்போ சிரிச்சு பயமுறுத்துற?”
“அந்த அவர்ர்ர்ர்ர்... ஜூனியராங்க???”
“இங்கே பார் ஒசிமம், நீயா எதையாவது யோசிக்காதே... உதயை எனக்கு பிடிக்கும். ஆனால், நீ நினைக்குற மாதிரி இல்லை...”
“ஹுஹும்... அப்புறம்...!”
“அவர் ரொம்ப நல்லவர்டி... சும்மா இது போல காஸிப் எல்லாம் கிளப்பி விடாதே!”