“தெரிஞ்சுருச்சுல்ல? வா, வா சாப்பிட போகலாம்...”
“ஹப்பாடியோ ஒரு வழியா கூப்பிட்டீயே... சந்தோஷம்!”
நந்திதாவிற்கு நிஜமாகவே பசிக்கிறதா அல்லது பேச்சை மாற்ற சொல்கிறாளா? நந்திதாவின் சிரிப்பு நிஜம் தானா? அல்லது மற்றவர்களை மற்ற விஷயங்களில் ஏமாற்றுவது போல் துளசியிடமும் மனதில் இருப்பதை மறைக்க முயல்கிறாளா?
மனதில் ஓடிய கேள்விகளுடன், நந்திதாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக எழுந்து நடந்தாள் துளசி. நந்திதாவும் அவளுடனே சென்றாள்!
கேள்வியும், யோசனையுமாகவே உணவு அறைக்கு நந்திதாவுடன் வந்தாள் துளசி.
“சரி நந்து, நான் டேபிள் ரெடி செய்றேன். நீ போய் எல்லோரையும் சாப்பிட வர சொல்லு,” என தோழியிடம் சொன்னாள் துளசி.
நந்திதா உடனே செல்லாமல் தயக்கத்துடன் நின்றாள்.
“என்னடி? என்ன விஷயம்?”
“நான் இதெல்லாம் அரேன்ஜ் செய்றேன் ஒசிமம். நீ போ... போய் எல்லோரையும் கூப்பிட்டுட்டு வா,” என்றாள் நந்திதா!
துளசி அமைதியாக நந்திதாவை ஒரு ஊடுருவும் பார்வை பார்த்தாள்!!!
தோழியின் பார்வையில் இருந்து தப்பிக்க அவசரமாக தன் முகத்தை திருப்பிக் கொண்ட நந்திதா, “பசிக்குதுடி சீக்கிரம் போயிட்டு வா,” என்றாள்.
துளசி மேலே எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள்.