“அப்போ கூட அந்த அவர்ர்ரர்ர்ர்ர் மேலே தான் உனக்கு அக்கறை. உன்னை பத்தி கவலையில்லை???? ஹ்ம்ம்ம்... அப்போ நீ சொல்றது எல்லாம் நிஜம்???”
“ஆமாம்...”
“என் கிட்ட நீ எதையும் மறைக்கவே இல்லை... இது மட்டும் தான் உன் மனசுல இருக்கிறது???”
நந்திதா ஆமாம் என்றும் சொல்ல முடியாமல், இல்லை என்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள். துளசியும் உடனே எதுவும் சொல்லாமல் அவளை யோசனையுடன் பார்த்திருந்தாள். பின்,
“நந்து, நான் உனக்கு நல்லது தான் நினைப்பேன்னு உனக்கு தெரியும்ல?” என்றாள்!
“என்னடி புதுசா ஸ்டார்ட் செய்ற! இப்போ எதுல என்னை மாட்டி விடலாம்னு நினைக்குற?”
துளசிக்கு சிரிப்பு வந்தது.
“சரியா தான் சொல்றடி... உனக்கு கல்யாணம் செய்து வச்சிடலாம்னு நினைக்கிறேன்.”
“நனைக்காதே, போய் காய போடு...! உனக்கு வேற வேலை இல்லையா ஒசிமம்?”
“இல்லன்னு வச்சுக்கோ. இப்போ நான் சொல்ல வந்ததை என்னை சொல்ல விடு.”
“சொல்லு...”
“உதய் ரொம்ப நல்லவன் நந்து. மெச்சுர்டா தின்க் செய்பவனும் கூட... அவன் உனக்கு நல்ல ஜோடியா இருப்பான்னு எனக்கு தோணுது...”
நந்திதா மீண்டும் திகைத்துப் போய் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.