(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“இந்த ஏஜ் டிஃபரன்ஸ் இல்லாமல் இருந்திருந்தா உன் கிட்ட இப்படி கேட்டுட்டு இருக்கவே மாட்டேன் நந்து... இது தான் சரின்னு நானே உனக்கு சொல்லி இருப்பேன்... பட் இது கொஞ்சம் பெக்யுலியரான விஷயம்...”

   

துளசி சொல்லி முடிக்கவும், நந்திதா வாய் விட்டு சிரித்தாள்... சிரிப்பினூடே,

   

“உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு ஒசிமம்... மண்டையில நட் போல்ட் ஏதோ லூசா இருக்கும் போலருக்கு... உன்னோட சரத் கிட்ட சொல்லி ஏதாவது செய்ய சொல்லு... எனக்கு கல்யாணம் செய்துக்க இந்த உலகத்துல வேற யாருமே இல்லை பாரு... போடி லூசு...” என்றாள் கேலியாக!

   

நந்திதாவின் இந்த சிரிப்பு ‘ரியாக்ஷனை’ எதிர்பார்த்திராத துளசி இப்போது திகைத்து வாயடைத்துப் போனாள். நந்திதா மறுப்பாள்... வயது வித்தியாசத்தை பற்றி சொல்வாள் என்று தான் துளசி எதிர்பார்த்திருந்தாள்...

   

“ஹலோ வாயாடி, சொல்றதை எல்லாம் சொல்லிட்டு இப்போ எதுக்கு இப்படி பே பேன்னு முழிக்குற? கண்ணைப் பாரு!”

   

நந்திதாவின் கிண்டலில் திகைப்பில் இருந்து வெளி வந்த துளசி,

   

“நான் வாயாடியா? இது உலக மஹா அநியாயமா இருக்கு,” என்றாள்.

   

“இருந்துட்டு போகட்டும்... உன் வீட்டு கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்களா ஒசிமம்? எனக்கு பசிக்குது...”

   

“கெஸ்ட் வந்தாலும் உனக்கு சாப்பாடு தருவோம்டி. பட்டினி எல்லாம் போட மாட்டோம் கவலைப் படாதே...”

   

“என்ன ஒரு தாராள மனசு துளசி உனக்கு!”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.