ஹேமாவின் நடவடிக்கைகள் கமலுக்கு வித்தியாசமாக இருந்தது. அவளின் முகமும் சோர்வாக தெரிந்தது.. கண்கள் சிவந்து போயிருந்தது...
எதுவோ சரியில்லை என்ற எச்சரிக்கை மணி அவனுள் ஒலிக்க, “சொல்லுங்க டாக்டர், எதுக்கு வர சொன்னீங்க?” என்றுக் கேட்டான்.
அவனை பாவமாக பார்த்த ஹேமா, “சுமித்ரா ரீசன்டா என்னை பார்க்க வந்திருந்தா,” என்று ஆரம்பித்தாள்.
கமலின் இதயம் எதனாலோ தன் துடிப்பை அதிகரித்தது... அவனின் மூளை என்னவோ கெட்ட செய்தி வர போவதாக அவனுக்கு அறிவுறுத்தியது!
“ம்ம்ம்ம்...?” மேலே என்ன என்று கேட்கவும் இயலாமல், ம்ம்ம் போட்டு அவளை பேச்சை தொடர சொன்னான் கமல்.
“சுமி சொன்னதை வச்சு சில டெஸ்ட் செய்ய சொல்லி இருந்தேன்... அதுக்கான ரிசல்ட் வந்திருக்கு...” சொல்லும் போதே ஹேமாவின் பேச்சின் ஸ்ருதி மாறி அவனுக்கு செய்தியை மறைமுகமாக சொல்ல... அதை ஏற்றுக் கொள்ள விரும்பாமல்,
“சுமிக்கு என்ன டாக்டர்?” என்று நேரடியாகவே கேட்டான் கமல்.
“அவளுக்கு Endometrial Cancerன்னு ரிசல்ட் சொல்லுது கமல்...”
“அப்படின்னா???”
“அவளுடைய uterus அதாவது கர்ப்பப்பையில் நிறைய கேன்சர் செல் இருக்கு...”
“டாக்டர்...!!!!????”