ஹேமாவிற்கு உதவிக்கு என்று இருந்த ஜூனியர் டாக்டர், நர்ஸுகள் ஓடி வந்து எட்டிப் பார்த்தார்கள்.
தன் கண்ணில் இருந்த கண்ணீரை நாசுக்காக துடைத்து விட்டு, அவர்களை பார்த்து ஒன்றுமில்லை என்று தலை அசைத்து சொன்னாள் ஹேமா...
அவர்களும் புரிந்துக் கொண்டவர்களாக நகர்ந்து சென்றார்கள்.
“சாரி கமல்...”
“நோ... நோ... சாரி, சாரின்னு சொல்லாதீங்க டாக்டர்... ஏதாவது செய்ங்க...”
“என்னால செய்ய கூடியது ஏதாவது இருந்தா நான் இந்நேரம் செய்திருக்க மாட்டேனா???”
“டாக்டர்... ப்ளீஸ்... ப்ளீஸ்... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... எந்த நாட்டுக்கு போகனும்னாலும் போகலாம்... ப்ளீஸ் டாக்டர்...”
அவன் கண்ணீருடன் கெஞ்ச, ஹேமா இல்லை என்பது போல தலை அசைத்தாள்...
“எத்தனையோ நாட்டுல இருந்து நம்ம நாட்டுக்கு கேன்சர் ட்ரீட்மென்ட்க்காக வராங்க கமல்... சின்னதா ஒரு இழை இருந்திருந்தா கூட நான் விட்டிருந்திருப்பேனா? பொதுவா uterus கேன்சர் ஆரம்ப ஸ்டேஜில கண்டு பிடிச்சா சர்ஜரி செய்து இம்பாக்ட் ஆன உறுப்புகளை ரிமூவ் செய்து பேஷண்ட்டை காப்பாத்திடலாம்... ஆனால் சுமிக்கு அந்த கேன்சர் செல் uterusன்னு இல்லாம நிறைய இடத்துல பரவிடுச்சு... சர்ஜரி என்பது சாத்தியமில்லை... மூணு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட பேசிட்டு தான் சொல்றேன் கமல்... அவளுக்கு ஒண்ணுன்னா நான் விட்ருவேனா???”
ஹேமாவின் குரல் மீண்டும் தளுதளுத்தது...
ஆனால் கமல் அதற்காக வருந்தும் நிலையில் இல்லை...