(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 08 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

சேகர் தளர்ந்த தோற்றத்துடன் இருந்தார். அவரின் முகம் காய்ச்சலின் காரணமாக சிவந்துப் போய் இருந்தது. சோர்வான கண்களை சுற்றி கரு வளையங்களும் தெரிந்தது!

   

“உங்களை படுத்து ரெஸ்ட் எடுக்க தானே சொன்னேன்???” என்ற கௌசல்யாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல், சரண்யாவை வரவேற்றார் சேகர்.

   

“வா சரண்யா... எப்படி இருக்க?”

   

“நான் நல்லா இருக்கேன் சார்... உங்க ஹெல்த் எப்படி இருக்கு? ரொம்ப டையர்டா தெரியுறீங்க?” என்ற சரண்யாவின் கேள்வியில் உண்மையான அக்கறை இருந்தது. 

    

அதை உணர்ந்து புன்னகைக்க முயன்ற சேகர், “எனக்கு ஒன்னுமில்லை சரண்யா, ஃபீவர் தான்... கௌஸி தான் பத்தியம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்திட்டு இருக்கா,” என்றார்.

   

“உங்க நல்லதுக்கு தானே சார் மேடம் சொல்றாங்க...”

   

“அதை சொல்லு சரண்யா... டைபாய்ட் எல்லாம் சாதாரணமா எடுத்துக்க கூடாது... சரி, ஆனா அவரை விடு... அவர் அப்படி தான் புலம்புவார்... நிஷா குட்டி எப்படி இருக்கா?”

   

“நல்லா இருக்காம்மா...”

   

தொடர்ந்து, சேகர் – கௌசல்யாவின் திருமணமாகி விட்டிருந்த இரண்டு மகள்களை பற்றி சரண்யா விசாரிக்க, நேரம் மெல்ல நகர்ந்தது...

   

மெதுவாக தான் பேச வந்த விஷயத்தை தொடங்கினாள் சரண்யா.

   

“சார்... அந்த மித்ரன் இருக்க இடத்துல என்னால தொடர்ந்து வேலை செய்ய முடியும்னு தோணலை... நான் சீக்கிரமா வேற வேலை தேடிட்டு அந்த வேலையை விட்டுடலாம்னு நினைக்கிறேன்... ஏதோ சிங்கம் புலி மாதிரி உருமுறார்... தேவையே இல்லாமல் கத்துறார்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.