(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

சேகரும், கௌசல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்....

   

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்த சரண்யாவிற்கு அதன் பொருள் புரியவில்லை....

   

“என்ன ஆச்சு சார்?”

   

“நானும் கூட அதே போல தான் நினைச்சேன் சரண்யா,” என்றார் சேகர், தன் மனைவியை பார்த்தப் படி!

   

“என்னை பார்த்துட்டு ஏன் அரைகுறையா சொல்றீங்க? நம்ம சரண்யா தானே முழுசா சொல்லுங்க,” என்று கணவரிடம் சொன்ன கௌசல்யா, சரண்யாவிடம்,

   

“இவருக்கும் அந்த மித்ரனை பிடிக்கலையாம் சரண்யா... கொஞ்ச நாளுக்கு முன்னாடியே சொல்லிட்டு இருந்தார்... நான் தான் பிடிக்குது பிடிக்கலைன்னு எல்லாம் யோசிக்காமல் வேலையை மட்டும் செய்ங்கன்னு சொன்னேன்,” என்றாள்.

   

“ஆமாம் சரண்யா, கோபி கூடவும் உன் கூடவும் வேலை செய்துட்டு அந்த மித்ரன் கூட வேலை செய்றது... ப்ச்... அந்த ஆள் சரியே இல்லை,” என்றார் சேகர் எரிச்சலுடன்!

   

“சரியா இல்லைனா இருந்துட்டு போறார் உங்களுக்கு ஏன் அதெல்லாம்? சரண்யா நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரி... அதே மாதிரி ஏன் அந்த மித்ரன் கிட்ட எதிர்பார்க்குறீங்க? அவர் சொல்ற வேலையை மட்டும் செய்துட்டு போங்க,” என்றாள் கௌசல்யா.

   

“ப்ச்... நீ ஈசியா சொல்லிட்ட கௌசி...”

   

“ஈசியா இல்லைங்க... எனக்கு புரியுது.... ஆனால் யோசிச்சு பாருங்க... உங்களுக்கு வர பென்ஷன் மட்டும் நமக்கு போதுமா? இரண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்துட்டா, அவங்களை அப்படியே மறந்துற முடியுமா??? மேல செய்ய வேண்டியது எவ்வளவு இருக்கு... அவங்களை விடுங்க, நம்மளை எடுத்துக்கோங்க... நமக்குன்னு பணம் வேண்டாமா? சின்ன ஜூரம்னா கூட டாக்டர் செலவு, மருந்து செலவு எவ்வளவு ஆகுதுன்னு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.