“நீ சின்ன பொண்ணு சரண்யா... எல்லோரும் உன்னை ஒரே மாதிரி பார்க்க மாட்டாங்க... அந்த மித்ரன் கத்துறான் திட்டுறான் சரி, ஆனால், தப்பா எதுவும் நடந்துக்கலையே...”
“ச்சேச்சே... அப்படி எதுவுமில்லைமா...” என உடனடியாக சொன்னாள் சரண்யா.
“அப்போ யோசிச்சு முடிவு எடு சரண்யா... புதுசா போற இடம் எப்படி இருக்கும், யார் இருப்பா, எதுவும் தெரியாதே... ஒரு பழமொழி சொல்வாங்க தெரியுமா... தெரியாத தேவதையை விட தெரிஞ்ச சைத்தான் பரவாயில்லைன்னு! யோசிச்சு முடிவெடு...”
“ம்ம்ம்... சரிம்மா...”
“இதை அவர் முன்னாடி சொல்ல வேண்டாம்னு தான் இங்கே சொல்றேன்... உனக்கு கோபம் இல்லையே...”
“என்னம்மா நீங்க? என்மேல இருக்க அக்கறைல சொல்றீங்கன்னு கூடவா எனக்கு புரியாது... தேங்க்ஸ்ம்மா...”
“தேங்க்ஸ் சொல்லி எங்களை தள்ளி வைக்காதே... உனக்கு நாங்க இருக்கோம் எப்போவும்னு ஞாபகம் வச்சுக்கோ...”
“தெரியும்மா... சரி கிளம்புறேன்...”
“ம்ம்ம்... பார்த்து போ...”
✽✽✽
வீட்டை நோக்கி செல்லும் பொது கௌசல்யாவின் பேச்சு சரண்யாவின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது! கௌசல்யா சொன்ன அறிவுரையில் இருக்கும் உண்மை அவளை சுட்டது...