(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 21 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையின் ஆட்களும் அங்கு புதிதாக அமைத்திருந்த குடிசை பகுதிகளை சுற்றி வளைத்தனர். சித்தனும் ஒரு பக்கமாக செல்ல தில்லையோ மறைந்து மறைந்து அந்த பகுதிக்குள் சென்றான். சம்யுக்தாவோ காலை நேர வாக்கிங் செல்வது போல் தைரியமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட தில்லையோ

   

”ஓய் என்ன வாக்கிங்கா போற, எதிரிங்க இடம் இது, மறைஞ்சி மறைஞ்சி நட இல்லை துப்பாக்கியால சுட்டுடுவாங்க, அப்புறம் உனக்கு நியாயமே கிடைக்காம நீ செத்துடுவ பரவாயில்லையா வா இப்படி” என அழைக்க அவளும் நியாயம் கிடைக்க வேண்டுமே என நினைத்து அவனிடம் சென்றாள். அவனோ அவளின் கையை பிடிக்க வர அவளோ தடுத்தாள்

   

”வேணாம் நீ என்னை தொடாத“

   

”உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன“

   

”நீ முரட்டுத்தனமா பிடிக்கற, எனக்கு வலிக்குது”

   

”சரி லேசா பிடிக்கறேன் வா“

   

”வேணாம்“

   

”அட வாம்மா உன்னால கருணா எஸ்கேப் ஆயிடப் போறான்”

   

“பாவி பாவி ஒருத்தனை கொல்றதுக்கு இவ்ளோ ஆர்வமா கிளம்பறியே, நீயெல்லாம் செத்தா நரகத்துக்குதான் போவ”

   

”அங்க நீ இருக்க மாட்டன்னா சந்தோஷமா நான் நரகத்துக்கே போறேன், இப்ப வா என்கிட்ட” என சொல்லியதோடு அவசரமாக அவளது கையை பிடித்து இழுத்து தன்னிடம் சேர்த்துக் கொண்டவனுக்கு சட்டென ஒரு யோசனை வந்தது, பட்டென அவளது இடுப்பை சுற்றி கையை வளைத்து அவளை தன்னுடன் இழுத்து அணைத்துக் கொள்ள அவளுக்கு கூச்சமே வந்தது

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.