(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”சரிங்க சார்” என கான்ஸ்டபிள் சொல்லவும் 

   

”தில்லை, கருணாகரன்ங்கற ரௌடியை கொன்னிருக்கான் அதுக்கான ரிக்கார்ட்ஸாவது இருக்கனுமே” என கேட்டபடியே கான்ஸ்டபிளை பார்க்க அவரோ

   

”அது ஏன் நம்மகிட்ட இருக்கப் போகுது“

   

”ஏன் இருக்காது அவனை கொன்னது தில்லைதானே“

   

”ஆமாம் ஆனா, கொன்ன இடம் கடலூராச்சே அங்க கருணாகரன் செத்தா நம்மகிட்ட கேஸ் வராது, தகவலும் இருக்காது“

   

”அப்ப கடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி கருணாகரன் கேஸ் டீடெல்ஸ் கேளுங்க”

   

”அவன்தான் செத்துட்டானே சார் அப்புறம் என்ன“

   

”செத்தானா பிழைச்சானான்னு நான் தெரிஞ்சிக்கனும், ஏன்னா தில்லை விசயத்தில எல்லாமே மர்மமா இருக்கு, நிஜமாவே அவன் செத்திருந்தா பத்திரிகையில செய்தி வந்திருக்கனும்ல”

   

”வந்திருக்கும் சார்”

   

”அப்ப செய்தி வந்த நியூஸ் பேப்பரையாவது கொண்டு வாங்க பார்க்கிறேன்“

   

”சரிங்க சார், அப்புறம் போறேனே கதை ரொம்ப ஆர்வமா போகுது, எப்படிதான் தில்லை கருணாவை கொன்னான்னு தெரிஞ்சிக்கிட்டு போறேனே சார்”

   

”யோவ் ஏன்யா இப்படி“

   

”அதுக்கில்லை சார் நடந்த சம்பவத்தில இந்த பொண்ணு தில்லையோட கூடவே இருந்தாங்களே, எப்படியும் இவங்களுக்கு அங்க ஏதாவது நடந்திருக்கும்ல, அது என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கிட்டு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.