(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

அவளிடம் காட்டி

   

”நான் செய்றதைப் பாரு” என சொல்லி அவளுக்கு துப்பாக்கியை கையாளும் முறையை சொல்லிக் கொடுத்தான் அவளும் நன்றாகவே பார்த்துக் கொண்டாள்.

   

”எனக்கு குறி பார்த்து சுட வராதே“

   

”பரவாயில்லை உனக்கு எப்படி வருமோ அப்படி சுடு, நமக்குத் தேவை எதிரி ஒழியனும் எப்படி சுட்டா என்ன” என சொல்ல அவளும் சரியென்றாள்.

   

”நான் சொன்னது நினைவிருக்கில்ல, இந்த துப்பாக்கியோட மேல்பாகத்தை இழுத்துவிட்டு அப்புறம் சுடனும் சரியா” என சொல்ல அவளுக்கு எரிச்சலே வந்தது. அவன் சொன்னதை அப்படியே செய்துவிட்டு அவனை பார்த்து குறி வைத்தாள். அவனுக்கு திக்கென்றது

   

”ஆஆ என்ன செய்ற நீ, சுட்டுடாதம்மா கருணாவை நான் கொன்னபின்னாடி வேணா நீ என்னை சுடு, அதுவரைக்கும் இதை என்கிட்ட காட்டாத, அதோ அந்த பக்கமா காட்டு, அந்த குடிசைக்குள்ளதான் கருணா இருக்கான்” என சொல்லி அவளது கையை தன் பக்கம் இருந்து குடிசை பக்கம் திருப்ப அவளோ நடுங்கும் கரத்துடன் குடிசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்

   

”சூப்பர் இதே பொசிஷன்ல இங்கயே இரு, நான் போய்ட்டு வரேன்”

   

”எங்க போற நீ”

   

”உள்ள போறேன் எவ்ளோ நேரம்தான் இங்கயே இருக்கறது”

   

”அந்த கருணா வெளிய வரமாட்டானா”

   

”அவனா எப்படி வருவான், நாமதான் அவனை வரவழைக்கனும்”

   

”சரி வரவழை சீக்கிரமா கிளம்பலாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.