இரு ஆயிடுச்சி இன்னும் கொஞ்ச நேரத்தில வந்த வேலை முடிஞ்சிடும் அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க”
”அதுக்குள்ள எனக்கு மயக்கம் வந்துடுச்சின்னா”
“அப்படியே உன்னை இங்க விட்டுட்டு போயிடுவேன்”
”என்னது”
”ஆமாம் ஒழுங்கா இரு” என சொல்ல அவளோ உடனே கண்களை தன் கையால் பலமாக கசக்கிக் கொள்ள அதைத் தடுத்தான் தில்லை
”அழகான கண்களை ஏன் கசக்கற”
”மயக்கம் வரக்கூடாதுன்னு இப்படி செய்றேன்”
”ஓ அப்படியா இரு உனக்கு நான் தெளிவை வரவழைக்கிறேன்” என சொல்லியவன் தன்னிடம் இருந்த இன்னொரு துப்பாக்கியை அவளிடம் நீட்ட அவளோ பயந்தாள்
”இது எதுக்கு”
”உன் பாதுகாப்புக்குத்தான் நான் கருணாவை கொல்ற நேரத்தில பிசியா இருப்பேன், அந்த சமயம் உன்கிட்ட எவனாவது வந்துட்டான்னு வையேன், இதனால அவன் முட்டிக்கால் இருக்குல்ல அங்க பார்த்து சுடு”
”என்னால இது முடியாது” என பயப்பட அவனோ
”உன்னை காப்பாத்திக்கதான் இது, தப்பில்லை பிடி பிடி, எவனும் உன்கிட்ட வராம நான் பார்த்துக்கிறேன், அப்படி எவனாவது வந்தா இதால சுடு, இந்த ட்ரிகரை இழுத்து விட்டு சுடனும், அப்பதான் குண்டு வெளிய வரும் புரியுதா” என சுடுவது எப்படி என தில்லை சொல்ல அவளோ குழப்பமாகவே தலையாட்ட அவனே தனது இன்னொரு கையில் இருந்த துப்பாக்கியை