”சீ எனக்கு இந்த சாப்பாடே வேணாம், ஒருத்தனை கொன்னுட்டு அவன்ட்ட இருக்கற சாப்பாட்டை சாப்பிடறதா அது பாவம்”
”ஆமா நீ சைவமா அசைவமா”
”ஏன் கேட்கறீங்க“
”சொல்லேன்”
”ரெண்டும்தான்”
”கோழிகிட்ட பர்மிஷன் கேட்டா நீங்க வெட்டி சாப்பிடறீங்க”
”யாரோ வெட்டறாங்க நாங்களா கிட்ட இருந்து வெட்டி சமைச்சி சாப்பிடறோம்” என யுக்தா சொல்ல அதற்கு தில்லை
”அதே மாதிரிதான் இதுவும், நான் கருணாவை கொல்றேன், நீ அங்கிருக்கற சாப்பாட்டை சாப்பிடு ஒண்ணும் தப்பில்லை கொன்னா பாவம் தின்னா போச்சி”
”ம்ஹூம் எனக்குப் பிடிக்கலை வாங்க நாம போலாம்”
”என்னது போறதா இரும்மா கிட்ட கிட்ட வந்தாச்சி, இன்னும் கொஞ்ச நேரத்தில கருணாவை பிடிச்சிடலாம், அப்புறம் போற வழியில உனக்கு வேணும்ங்கறத வாங்கித் தரேன் கொஞ்சம் பொறுத்துக்க”
”எனக்கு தலை சுத்துது இதுக்கு மேல என்னால நடக்க முடியலை, கால் வலிக்குது சரியா தூங்காம கண் எரியுது, பசியால வயிறு வலிக்குது” என புலம்ப அவனோ
”உன்னால எனக்கு நெஞ்சு வலி வராம இருக்கே சந்தோஷம், இதப்பாரு புலம்பாத அமைதியா