(Reading time: 9 - 17 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”ஏய் என்ன செய்ற நீ விடு என்னை”

   

”ஷ் அமைதியாயிரு திரும்பவும் கன்ஷுட் பார்த்து பயந்துடப் போற, நான் இருக்கேன் உனக்கு, எதுவும் ஆகாது வா” என அவளை அழைத்தபடியே மறைந்து மறைந்து ஒரு கையில் துப்பாக்கியுடன் அந்த குடிசை பகுதிக்குள் முன்னேறிச் சென்றான்.

   

அவனது ஆட்களும் மற்ற பகுதியில் பதுங்கியடிபயே வந்தனர், அவர்களையும் ஒரு முறை பார்த்தபடி கருணா எங்கே என சைகை செய்து கேட்க அவர்களும் ஒரு இடத்தை காட்ட அதை நோக்கி முன்னேறினான் தில்லை. 

   

அதுவரை அவள் சொல்லி முடிக்கவும் எதிரே இருந்த ஆபிசர் சிதம்பரமோ அவளிடம்

   

”நீங்க சொன்னது வைச்சிப் பார்த்தா தில்லைக்கு போலீஸ் டிபார்ட்மென்ட்லயே ஆளுங்க இருக்காங்க சரியா” என  சொல்ல சம்யுக்தாவும் 

   

”ஆமாம் ஒருத்தர் பேரு சிவா, இன்னொருத்தர் பேரு செந்தில்” என சொல்ல சிதம்பரமோ கான்ஸ்டபிளிடம்

   

”சிவா, செந்தில்ன்னு நம்ம டிபார்ட்மென்ட்ல யாராவது இருக்காங்களா”

   

”இல்லை சார் அப்படி யாருமே இல்லை, இதைப்பத்தி ஏற்கனவே இவங்க கேட்டப்பவும் நான் சொன்னேன் சார்”

   

”ஒருவேளை வேற ஸ்டேஷன்ல இல்லை இல்லை ட்ரான்ஸ்பர் ஆகி போயிருக்கலாம்ல”

   

”இருக்கலாம் சார் ஆனா உறுதியா சொல்ல முடியாது”

   

”சரி அவங்க ரெண்டு பேரைப் பத்தியும் விசாரிங்க, எனக்கு அவங்களோட தகவல்கள் வேணும், அவங்களைப் பிடிச்சா தில்லையை பத்தி தெரிஞ்சிக்கலாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.