(Reading time: 5 - 10 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

அவனை நேராக பார்க்கவும் தைரியம் இல்லாதவளாக மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கையில் வைத்து சுழற்றி அதைப் பார்த்த படி பேசிய ஹேமா,

   

“கேன்சரை பொதுவா எந்த அளவுக்கு பரவி இருக்குன்றதை வச்சு வித விதமான ஸ்டேஜசா பிரிப்பாங்க... அது படி பார்த்தா சுமிக்கு இப்போ ஸ்டேஜ் 4...”

   

“டாக்டர்...!!!!!”

   

கமலின் குரலில் இருந்த அதிர்ச்சி ஹேமாவின் கண்களில் இருந்தும் கண்ணீரைக் கொண்டு வந்தது...

   

“இனிமேல், எவ்வளவு நாள் சுமியோட வாழ்க்கையை நீட்டிக்க முடியும்னு பார்க்கிறது மட்டும் தான் நம்மால முடிஞ்சது... சாரி கமல்...!”

   

சொல்லி முடித்த போது ஹேமாவின் குரல் மொத்தமாக உடைந்து போயிருந்தது.

   

கமல் அது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை...

   

தன்னை என்ன தாக்கியது என்பதை கூட தெரியாமல் உயிர் வலிக்க அடிப்பட்டவனை போல அதிர்ந்து அமர்ந்திருந்தான்.

   

அவனின் காதில் விழுந்தது சரி தானா???

   

என்ன சொல்கிறார்கள்???

   

சுமியின் வாழ்க்கையை எவ்வளவு நீட்டிக்க முடியும் என்று மட்டும் தான் பார்க்க வேண்டுமா???

   

“நோஓஓஓஓஓஓஓஓஓஓஒ..............” தொண்டைக் கிழிய அலறினான்...

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.