(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 22 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

ம்யுக்தாவிற்கோ மயக்கம் மெல்ல மெல்ல வர தொடங்க கைகள் நடுங்க அவளே எதிர்பார்க்காமல் கையில் இருந்த துப்பாக்கியை அழுத்தினாள். அது தெரியாமல் குண்டு வெளியேறி சரியாக கருணாகரனின் குடிசைக்குள் சென்றது ஆனால், யாருக்கும் பாதிப்பில்லை ஆனால் அந்த சத்தம் கேட்டு அனைவருமே வெளியே வந்தார்கள்.

   

தில்லையோ அவசரமாக சம்யுக்தாவிடம் வந்தான்

   

”அடிப்பாவி ஏண்டி இப்படி செஞ்ச உன்னை யாரு சுடச் சொன்னது“

   

”நான் எங்க சுட்டேன், அதுவா வெடிச்சிடுச்சி” என்றாள் 

   

அவளின் நிலைமையை பார்த்தான், இமைகள் மூட ஆரம்பிப்பதை புரிந்துக் கொண்டான். அவள் மயக்கநிலைக்கு செல்கிறாள் என தெரிந்ததும் அவளது கன்னத்தை நன்றாக தட்டிக் கொடுத்தான் அதில் அவளோ முகத்தை சிலிர்ப்பினாள்

   

”ம்ம்ம்” என முனக

   

”இந்நேரம் மயக்கம் போட்டுடாதம்மா, உன்னை வைச்சிக்கிட்டு என்னால எதையும் செய்ய முடியாது, இங்க பெரிய சம்பவம் நடக்கப் போகுது நீ சுட்டதால கருணாவோட ஆளுங்க வெளிய வந்துட்டானுங்க, அவங்ககிட்ட இருந்து நாம தப்பிக்கனும், முதல்ல நீ தப்பிக்கனும், நீ இங்க இருக்காத கிளம்பு போ போய் வண்டியில ஏறிக்க போ”

   

”முடியாது என்னை திசை திருப்பிட்டு நீ உன் வேலையை முடிச்சிட்டு ஓடிடலாம்னு நினைச்சியா, நீ எங்க போனாலும் சரி, கடல் கடந்து போனாலும் உன்னை நான் விடமாட்டேன், எனக்கான நியாயத்தை நீ வழங்கித்தான் ஆகனும்” என சொல்லியதோடு விடாமல் அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அவனுக்கு திக்கென்றது

   

”சொன்னாக் கேளு இப்ப நான் சண்டை போட போகனும், என்னை விடு”

   

”முடியாது” என்றாள் ஈனக்குரலில் அவனுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. அதற்குள் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.