இதில் தில்லையை பார்த்துவிட்ட எதிரியாட்களில் இருவர் ஆவேசமாக அவனை நோக்கி ஓடிவர அவனோ அவர்களை துப்பாக்கியால் சுடாமல் சம்யக்தாவின் மீது இருந்த கோபத்தில் கையாலேயே அவர்களை அடித்து காலால் உதைத்து என இருவரையும் சில நொடிகளில் மண்ணைக் கவ்வ வைத்தான். அவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வந்து தரையில் விழுந்து வலியில் முனகவும் அவளுக்கு பயமே வந்தது
”அய்யோ பாவம் இரத்தம் வருது, எனக்கு பயமா இருக்கு” என சொல்லியபடியே அவனிடம் ஓட்டிக் கொள்ள அவனோ நொந்து பொய் தலையில் அடித்துக் கொண்டான்
”தள்ளியிரு சண்டை நேரத்தில நீ ஒண்ணு” என சொல்லிவிட்டு விலகி முன்னேறிச் செல்ல அவளும் அக்கம் பக்கம் பார்த்தாள்.
அங்கு இரு பக்க ஆட்களும் கோபத்துடன் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை அப்படி பார்க்கவே அவளுக்கு பயமாக இருக்கவும், முன்னால் சென்ற தில்லையிடம் சென்று மீண்டும் ஒட்டிக் கொள்ள அவனோ நொந்துப் போனான்
”சொன்னா கேட்க மாட்டியா நீ, சொல்ல சொல்ல என்கூட வர்ற உன்னை, வா என்கூடவே இருக்கனும்னு ஆசைப்படறல்ல வா” என அவளது கையை பிடித்துக் கொண்டவன் முன்னேறி வேகமாக நடந்தான், அவளால் கடற்கரை மணலில் அவ்வளவு வேகமாக நடக்க முடியவில்லை, இதில் தலை சுற்றல் வேறு, தில்லை வேறு அவளை இழுத்துக் கொண்டு செல்ல அவளும் தடுமாறி நடந்தபடியே சென்றாள்.
தில்லையை எதிர்க்க வந்தவர்களை கையில் இருந்த துப்பாக்கியால் அவர்களின் காலில் சுட்டுவிட்டு, கையால் அவர்களை தள்ளிவிட்டு முன்னேறினான்.
”ஏன் இப்படி அவங்களை அடிக்கற, அதான் அவங்களை சுட்டல்ல போதாதா, இவ்ளோ கொடூரமா நடந்துக்கற, இது அநியாயம் நான் போலீஸ்கிட்ட சொல்றேன் உன்னைப் பத்தி” என சம்யுக்தா சொல்ல அதற்கு தில்லையோ