”நீ யார்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்க, எவனும் நம்ப மாட்டான் அப்படியே நம்பினாலும் எனக்கு கவலையில்லை, நான் தப்பிச்சிடுவேன் நீ பேசாம வர்றியா” என சொல்ல அவளோ கேட்காமல்
”போலீஸ் போலீஸ்” என சத்தமாக அழைக்க அவனோடு சேர்ந்து அங்கிருந்த அனைவருமே பதறினார்கள்.
அதில் சி்த்தனோ
”அண்ணா என்ன அண்ணா இது, அவங்களை கத்த வேணாம்னு சொல்ணா” என அலற தில்லையோ அவளின் வாயைப் பொத்தினான்
”கத்தாத நிஜமாவே போலீஸ் வந்துடப் போறானுங்க, துப்பாக்கிச் சத்தம் கேட்டு தானா வரட்டும் நீயா அழைக்காத” என சொல்ல அவனின் மற்ற அடியாட்களோ
”அண்ணா கருணா போயிடப் போறான், போண்ணா அப்புறம் பேசிக்கண்ணா, போலீஸ் வர்றதுக்குள்ள நாம இங்கிருந்து போயிடனும் அண்ணா” என கத்த அதில் அவனோ
”நீ இங்கயே இரு, கத்தாத, அந்த கருணா ரொம்ப தூரம் ஓடியிருக்க மாட்டான் அவனை நான் பிடிச்சி கொன்னுட்டு வந்துடறேன் அமைதியா இரு” என சொல்லிவிட்டு நகர முயல அவளும் வர வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு குடிசை பகுதியை கடந்து வெளியேறிச் சென்றான்
இங்கு தில்லையின் ஆட்களோ எதிரியின் ஆட்களை பிடித்துக் கொண்டனர், அனைவரையும் அடித்து போட்டு தங்கள் வண்டிகளில் அவர்களை ஏற்றியவர்கள் டிரைவர்களிம்
”கொண்டு போய் சேர வேண்டியில இடத்தில இவனுங்களை சேர்த்துடு, நாங்க வேற ஊருக்கு போயிட்டு 2 நாள் கழிச்சி வரோம், அண்ணன் கிட்ட சொல்லிடு“ என சொன்னார்கள்.
2 வண்டிகளும் கிளம்பியது. தில்லையின் ஆட்களோ எப்படியும் தில்லை கருணாவை