Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
புதுச்சேரியில் பிரசித்திப் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோவிலின் அர்ச்சகர் மந்திரம் சொல்வதை கேட்டபடி விநாயகரை வணங்கினாள் சுபாஷினி.
அவளின் ஒரு பக்கம் கணவர் பிரகாஷும் மற்றொரு பக்கத்தில் ஒரே மகன் ஆகாஷும் நின்றிருந்தார்கள்.
இப்படி குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட கிடைத்த வாய்ப்பில் அவளின் மனம் நிறைந்து போயிருந்தது.
சுபாஷினி குடுமபத்திற்கு அருகேயே அவளின் தோழி ஜோதி, அவளின் கணவர் வசீகரன் மற்றும் மகள் அக்ஷராவும் கடவுளை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
வசீகரனும், பிரகாஷும் தொழில் முறை நண்பர்கள்.
இந்த நட்பு, அவர்களின் திருமணத்திற்கு பின், ஜோதி, சுபாஷினியிடமும் எதிரொலிக்க, இரண்டு குடும்பமும் இருபத்தி ஏழு ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் பழகி வந்தார்கள்.
இன்று, சுபாஷினி – பிரகாஷின் முப்பதாவது திருமண நாளிற்கென சென்னையில் இருந்து ஒன்றாக புதுச்சேரி வந்திருந்தார்கள்.
கோவில் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு வெளியே வந்த உடன்,