கடிக்கும் கொசுவை கூட அடித்துக் கொல்லாமல், மென்மையாக தள்ளிவிடும் குணம் கொண்டவன்.
எம்.பி.ஏ படித்து முடித்து விட்டு, retail துறையை தேர்வு செய்து தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் வளரும் தொழிலதிபர்.
அவனின் கம்பெனிக்கு சொந்தமான இரண்டு மால்களும், மல்டிப்லேக்ஸுகளும் ஏற்கனவே சென்னையின் முக்கிய பொழுது போக்கு அங்கமாக மாறி போயிருந்தது.
அக்ஷரா கல்லூரி படிப்பை முடித்து விட்டு தன்னுடைய விருப்பத் துறையான புகைப்படத் துறையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள்.
குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் போக, கேமராவும் கையுமாக அலைவதே அவளுக்கு வேலை.
காரில் சாய்ந்து நின்ற படி அகஷரா தன் மொபைல் ஃபோனை எடுத்து அதிலிருந்த நோடிஃபிக்கேஷன்களை பார்த்துக் கொண்டிருக்க, ஆகாஷ், தூரத்தில் தெரிந்த அம்மா அப்பாவை பார்த்தான்.
அங்கே பிரகாஷ் மனைவிக்கென இளநீயை தேடி தேடி தேர்வு செய்துக் கொண்டிருந்தார்.
ஆகாஷின் முகத்தில் இளநகை தோன்றியது.
அவனின் அம்மா அப்பா இடையே இருக்கும் அன்பு அவனுக்கு தெரியாதது இல்லை.
அவர்கள் இருவர் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியா, ‘குட் லுக்கிங்’கா, எது என்று டிஃபைன் செய்து சொல்ல முடியாது பார்த்த உடனே பர்ஃபக்ட் கபில் என்று சொல்ல வைக்கும் சூப்பர் ஜோடி!