“தேங்க் யூடா! ரொம்ப நாளா இந்த கோவிலுக்கு வரனும்னு ஆசை... கடைசில உன் மூலமா நடந்திருக்கு,” என்ற படி அவளின் அருகே இருந்த அக்ஷராவை அன்புடன் அணைத்துக் கொண்டாள் சுபாஷினி.
“என்ன ஸ்வீட் ஹார்ட் சின்ன விஷயத்துக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லிட்டு... நாம அப்படியா பழகுறோம்?” என அலுத்துக் கொண்டாள் அக்ஷரா!
“நீங்க இரண்டு பேரும் பேசுறதை பார்த்தா யாரு யாருக்கு ஃப்ரென்டுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது,” என்றாள் ஜோதி.
“ம்மா... ஒரே டையலாக்கை திரும்ப திரும்ப சொல்லாம, வேற ஏதாவது மாத்தி பேசுங்க... எனக்கு போர் அடிக்குது...! நீங்களும் என் ஸ்வீட் ஹார்ட்டும் ஓல்ட் ஃப்ரென்ட்ஸா இருக்கலாம். ஆனா இப்போ நானும் என் ஸ்வீட் ஹார்ட்டும் உங்களை விட க்ளோஸ்...”
“நினைப்பு தான் உனக்கு... சரி, வாங்க போய் கடைல இளநீ வாங்கி குடிக்கலாம்...”
“எனக்கு வேண்டாம்மா...” என அக்ஷரா சொல்ல,
“எனக்கும் வேண்டாம்...” என்றான் அதுவரை அமைதியாக இருந்த ஆகாஷ்.
“சரி, நாங்க நாலு பேரும் இளநீ குடிச்சுட்டு வரோம்... நீங்க இரண்டு பேரும் கார் கிட்ட வெயிட் செய்ங்க,” என்றாள் சுபாஷினி.
“சரிம்மா...”
ஆகாஷும், அக்ஷராவும் கார் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
ஆகாஷ் இருபத்தி ஏழு வயதான இளைஞன்.
அப்பாவின் அறிவும், அம்மாவின் மென்மையும் ஒன்றாக இணைந்த சாஃப்ட் பர்சனாலிட்டி.