(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

இதனாலேயே ஜோதிக்கும், சுபாஷினிக்கும் ரேவதியை அவ்வளவாக பிடிக்காது.

   

அவளுக்கு தலைக்கனம், தங்களை பார்த்து இளக்காரம் என தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

   

“இன்னைக்கு எங்க வெட்டிங் அனிவர்சரி ரேவதி. ஒரு சேஞ்சுக்கு பாண்டிச்சேரி வரலாம்ன்னு பசங்க ப்ளான் செய்து சொன்னாங்க... ஒய்ஃப்புக்கும் அந்த ஐடியா பிடிச்சிருந்தது... சரின்னு ரொம்ப யோசிக்காம கிளம்பி வந்துட்டோம்...”

   

“ஓ! கங்க்ராட்ஸ் பிரகாஷ்! ஹாப்பி அனிவர்சரி மிஸர்ஸ் பிரகாஷ்! சரிப்பா அப்புறம் பேசுவோம்... கோவில்ல நடை சாத்திட போறாங்க...”

   

“யா, யா... கேரி ஆன் ரேவதி...”

   

பெரியவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, அக்ஷ்ரா அகிலாவுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள்.

   

கணேஷ் அவர்களுக்கு துணையாக நிற்பவன் போல அருகேயே நின்றுக் கொண்டிருந்தான்.

   

“கணேஷ், அகிலா, வாங்க போகலாம்...” என ரேவதி அழைக்க, அகிலா தோழியிடம் விடை பெற்று கிளம்பினாள்.

   

அவளுடன் செல்லும் முன்,

   

“ரோடுல இப்போ எல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லையே அக்ஷ்ரா??” என்றுக் கேட்டான் கணேஷ்.

   

“இல்லைடா... தேங்க் யூ சோ மச்! அப்படியே ஏதாவது ப்ராபளம் வந்தாலும் நான் உன் பேரை சொல்லி எஸ்கேப் ஆகிட மாட்டேன்.... நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை,” என்றாள் அக்ஷரா!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.