(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

அவன் அவர்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, மொபைலை மூடி வைத்திருந்த அக்ஷரா, அவனின் பார்வையை கவனித்து விட்டு,

   

“டேய் அஷ் இப்படியே பார்த்துட்டு இருந்த கண்ணை நோண்டிடுவேன்... சும்மா சும்மா என் ஸ்வீட் ஹார்ட்டையும், ஹான்ட்சம் அங்கிளையும் பார்த்து திருஷ்டி போடாதே,” என்றாள்.

   

ஆகாஷ் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

   

“ப்ச்... எப்படிடா இப்படி கல்லு பிள்ளையார் மாதிரி இருக்க??? இருபத்தி ஏழு வயசானவன் மாதிரியா நடந்துக்குற??? என்னவோ எழுபத்தி இரண்டு வயசான முற்றும் துறந்த துறவி மாதிரில இருக்க...”

   

ஆகாஷ் இப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்தான்.

   

“போடா... உன் கிட்ட பேசுறதுக்கு நான் சுவர்ல போய் முட்டிக்கலாம்...”

   

“போ... அதோ அந்த வீட்டு காம்பவுண்ட் பெருசா இருக்கு பாரு...”

   

அக்ஷ்ரா ஆகாஷுக்கு ஏட்டிக்கு போட்டியான பதில் சொல்லும் முன்,

   

“ஹாய் அக்ஷரா,” என்ற குரல் கேட்டது!

   

திரும்பி பார்க்காமலே அக்ஷராவிற்கு அது யார் என்று புரிந்தது...

   

மகிழ்ச்சியுடனே குரல் வந்த பக்கமாக பார்த்தாள்.

   

அங்கே அக்ஷராவின் தோழி அகிலா மற்றும் அவளின் நண்பன் கணேஷும் அவனின் பெற்றோரும் இருந்தார்கள்.

   

“ஹாய் அகி... ஹாய் ராம்போ.... ஹெலோ ஆன்ட்டி... ஹெலோ அங்கிள்...” என்று 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.