குதூகலத்துடன் அவர்களை வரவேற்றாள் அகஷரா.
இளநீர் குடித்து முடித்து விட்டு நடந்து வந்துக் கொண்டிருந்த ஜோதியும், சுபாஷினியும் கணேஷின் அம்மா ரேவதியை கவனித்து விட்டு தங்களுக்குள் அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை பரிமாறிக் கொண்டு, மெல்லியக் குரலில் அவர்களின் விருப்ப பொழுதுபோக்கான ‘Revathy gossip’ செய்தார்கள்
“அவ கட்டி இருக்க சாரீயை பார்த்தீயா சுபா...”
“ம்ம்ம்... பார்க்காம என்ன? கோவிலுக்கு வந்த மாதிரியா இருக்கா?”
“இப்போ மட்டுமா, எப்போவுமே அப்படி தான்... பெரிய கிளியோபட்ரான்னு மனசில நினைப்பு...”
இந்த பேச்சு காதில் விழவும்,
“என்ன பேச்சு இதெல்லாம்??” என மென்மையாக அவர்களை கடிந்துக் கொண்டார் பிரகாஷ்.
வசீகரனும் இது பிடிக்கவில்லை என்பது போல அவர்கள் பக்கம் பார்த்தார்.
வேறு வழியில்லாமல் அப்போதைக்கு அமைதியானார்கள் பெண்கள் இருவரும்.
நான்கு பேரும் அருகில் வரவும், ரேவதி,
“ஹெலோ பிரகாஷ், வசீ... என்ன இங்கே??? இட்ஸ் அ சர்ப்ரைஸ்,” என்றாள்.
பிரகாஷ், வசீகரனை போலவே ரேவதியும் தனியாக எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தாள்.
இது போல வெளியே சந்திக்கும் நேரங்களில் ஆண்களிடம் சாதாரணமாக பேசும் ரேவதி, பெண்கள் பக்கம் புன்னகை ஒன்றை மட்டும் கொடுத்து விட்டு நகர்ந்து விடுவாள்.