தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 31 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
உதய் தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து உணவு மேஜையில் அமர, நந்திதாவும் துளசியின் அருகே அமர்ந்தாள்.
தங்களுக்குள் பறிமாறியபடி அவர்கள் உண்ண தொடங்கிய நேரம் உதய் அங்கே வந்து வெகு இயல்பாக நந்திதாவின் அருகே இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தான்.
மற்ற நேரங்களில் நந்திதா இதை கண்டுக் கொண்டிருக்க கூட மாட்டாள். ஆனால் இன்று அவள் இருந்த மனநிலையில் உதய் சிறிது இடைவெளி விட்டு அவளின் அருகே அமர்வது கூட அவளை ஏதோ செய்தது.
மும்முரமாக உணவு உண்பதாக மற்றவர்களுக்கு காண்பித்துக் கொண்டு தன்னை தானே இயல்பாக்கிக் கொள்ள முயன்றாள்.
நந்திதாவின் மனதினுள் இருந்த குழப்பங்கள் பற்றி தெரியாவிட்டாலும் துளசி அவ்வப்போது அவளை கவனிக்க தவறவில்லை. நந்திதா வழக்கம் போல் காய்கறிகளை தவிர்ப்பதை கவனித்தவள்,
“திருந்தவே மாட்டீயாடி நீ? ஒழுங்கு மரியாதையா இந்த வெண்டக்காய் பொரியல் எடுத்து சாப்பிடு,” என்று நந்திதாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“வெண்டக்காய் எல்லாம் ப்ரெயின் கம்மியா இருந்து அதை டெவலப் செய்றவங்க சாப்பிடுறது. எனக்கும் சேர்த்து நீ சாப்பிடு ஒசிமம்...”
கொஞ்சம் ‘அனிமேஷன்’ எஃபக்ட்டுடன் தலை அசைத்து நந்திதா சொன்னதை பார்த்து துளசிக்கு சிரிப்பு தான் வந்தது.
சரி வற்புறுத்த வேண்டாம் என்று அத்தோடு விட்டு விட்டாள்...
சிறிது நேரம் கழித்து உதய்க்கு அதே பொரியல் இருந்த பாத்திரத்தை கொடுக்கும் படி துளசி சொல்ல, நந்திதா அதை வாங்கி உதய் பக்கமாக வைத்தாள்.