தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 32 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடர்ந்து சில நிமிடங்கள் உதயை பேச விட்டு அமைதியாக இருந்த ப்ரியா, பின், “லைப்ரரி இன்னும் ஒரு மணி நேரத்தில மூடிடுவாங்க உதய். நீங்க லேட் ஆகும்னா சொல்லுங்க, நான் ஒரு ஆட்டோ பிடிச்சு போறேன்,” என்றாள்.
உதய் பதில் சொல்லும் முன், “அப்படி என்ன அவசரம் ப்ரியா நாளைக்கு லைப்ரரிக்கு போங்க,” என்றாள் துளசி.
“பொழுது போக எனக்கு வேற ஆப்ஷன் எதுவும் இல்லை... ரேவதி ஆன்ட்டி வேலை கொடுத்தா அப்புறம் லைப்ரரிக்கு போக முடியாது... இன்னைக்கு போனா தான் சரியா இருக்கும். அதான்...”
“என் கிட்ட கொஞ்சம் புக்ஸ் இருக்கு ப்ரியா, உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருந்தா எடுத்துக்கோங்க,” என்றாள் நந்திதா. அவளை போலவே ப்ரியாவும் கிட்டத்தட்ட அனாதை என்பது தெரிந்த நொடி முதலே நந்திதாவிற்கு ப்ரியா மீது சின்ன சாஃப்ட் கார்னர் ஏற்பட்டிருந்தது! அது மட்டுமல்லாமல் ப்ரியாவை முதலில் சந்தித்த நேரத்தில் சரியாக பேசாததற்கும் சேர்த்து ஈடுக்கட்டவும் விரும்பினாள்.
நந்திதாவை வியப்புடன் பார்த்த ப்ரியா “ரொம்ப தேங்க்ஸ்... என் கிட்ட மொபைல், லேப்டாப் எதுவுமில்லை... அதனால படிக்க புக்கும் இல்லைனா போர் அடிக்கும்... எந்த புக்கா இருந்தாலும் எனக்கு ஓகே தான்,” என்றாள்.
“என்னது உங்க கிட்ட மொபைல் இல்லையா??? எந்த கிரகத்துல இருக்கீங்க நீங்க?”
“செல் வாங்கி யூஸ் செய்றதுல பிரச்சனை இல்லை, ஆனால் யார் கிட்ட பேச? ஃப்ரென்ட்ஸ்ன்னு யாரும் இல்லை... உறவுக்காரங்க யாரும் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லை...”
“ஏன் ஃப்ரென்ட்ஸ் இல்லைன்னு சொல்றீங்க? நானும் துளசியும் உங்களுக்கு இப்போ இருந்து ஃப்ரென்ட்ஸ் தான்... வாங்க என் ரூம்ல இருக்க புக்ஸ் காட்டுறேன்...”
நந்திதா ஃப்ரென்ட் என்றதால் ஏற்பட்ட குதூகலத்துடன், “போலாமே,” என ப்ரியா சொல்ல, உதய்