சம்மந்தா சம்மந்தமில்லாமல் இப்போதெல்லாம் வரும் உதயின் ஞாபகம் அவளுக்கு கலக்கத்தை கொடுத்திருந்தது...
உதய் அவளிடம் அதிகபடியாக அக்கறை காட்டுவதாகவும் அவளுக்கு தோன்றியது...
துளசி அவளிடம் உதயை பற்றி பேசும் வரை இதை எல்லாம் பற்றி நந்திதா பெரிதாக யோசிக்கவில்லை... ஆனால் இப்போது எல்லாமே வேறு விதமாக தோன்றியது...
முன்பு போல அவளால் உதயை இயல்பாக நேராக பார்த்து பேசவும் தயக்கமாக இருந்தது...
“ஹாய் நந்திதா!”
திடுமென ஒலித்த உதயின் குரல் நந்திதாவை திகைக்க வைத்தது! சமாளிக்க முயன்ற படி,
“ஹ... ஹலோ.... உ.... உதய்....” என்றாள் தடுமாற்றத்துடன்.
அவளை குறுகுறுவென ஒரு பார்வை பார்த்த உதய், “என்ன இந்த பக்கம் போறீங்க?” எனக் கேட்டான்.
‘உன்னை சந்திக்காமல் இருக்க தான்...!’ என்ற உண்மையை சொல்லாமல்,
“நாகு வர சொன்னாங்க உதய், அவங்களை பார்க்க போயிட்டு இருக்கேன்,” என்றாள்.
ஏன் இந்த பக்கம் போகிறாய், என்றுக் கேட்பானோ??? என்று அவள் யோசிக்க, உதய் அது எதையும் கேட்காமல்,
“நாகு, ப்ரொடக்ஷன் லைன்ல இஷ்யூன்னு இப்போ தான் லைனுக்கு போனாங்க, நீங்க அவங்க ரூம்க்கு போனாலும் வேஸ்ட் தான்,” என்றான்
“ஓ! நான் அப்புறமா அவங்களை பிங் செய்துட்டு போறேன்... தேங்க்ஸ் உதய்...”