பக்கம் ஒரு பார்வை கொடுத்து விடை பெற்ற நந்திதா, துளசிக்கும் கண்ணாலேயே சேதி சொல்லி விட்டு சென்றாள்.
ப்ரியாவும் அவளுடனே சென்றாள். அவர்கள் இருவரும் ஒன்றாக போவவதை யோசனையுடன் கவனித்தான் உதய்.
நந்திதாவிற்கே அவனின் மனம் இன்னும் தெரியாததால், பிரியாவுடன் அவள் நட்புடன் பழகுவதால் ஒரு பிரச்சனையும் இல்லை என நினைத்துக் கொண்டான்.
✽✽✽
ப்ரியாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது! நந்திதாவிற்கும் உதய்க்கும் நடுவே காதல் இருக்கிறது என்று அடித்து சொல்ல கூடிய அளவிற்கு அவளிடம் ஆதாரம் எதுவும் இல்லை. ஆனாலும் அவர்கள் இருவரின் இடையே ‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ ஏதோ இருப்பதாக தான் அவளுக்கு தோன்றியது.
அதில் தவறேதும் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை. அவளுக்கே நந்திதாவை பிடித்திருந்தது.
தோழி யாருமில்லை என்ற உடன் நாங்கள் இருக்கிறோம் என்று நந்திதா சொன்ன பாங்கும், அவளுக்காக தேடி தேடி புத்தகங்கள் எடுத்துக் கொடுத்த நந்திதாவின் அந்த நல்ல மனமும் அவளுக்கு பிடித்திருந்தது.
ஆனால் ப்ரியாவிற்கு நந்திதாவை பிடிப்பதால் எதுவும் நடக்க போவதில்லையே...
ரேவதியிடம் இப்போதே நந்திதா பற்றி சொல்வதா வேண்டாமா என்று அவளுள் பட்டி மன்றம் ஓடிக் கொண்டிருந்தது...
போட்டுக் கொடுப்பதா, வேண்டாமா????
ரேவதி அவளிடம் சின்னதாய் ஏதாவது தெரிந்தாலும் சொல்ல சொல்லி இருந்தாள். ஆனாலும்...