‘வெண்டக்காய்’ பரிமாற்றம் ப்ரியாவிற்கு எக்ஸ்ட்ரா ஆர்வத்தை கொடுத்தது.
✽✽✽
“நந்திதா!”
உணவறையில் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்த நந்திதா உதயின் குரல் கேட்டு நின்றாள்.
அவளின் அருகே வந்த உதய், “தேங்க்ஸ்” என்றான்.
“எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க?”
“பிடிக்கலைனாலும் நீங்க அந்த பொரியலை வேஸ்ட் செய்யாமல் சாப்பிட்டதுக்கு தான் இந்த தேங்க்ஸ்!”
நந்திதா நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்...!
இவன் ஏன் இதை எல்லாம் கவனிக்கிறான் என்ற கேள்வி ஒரு பக்கமும், இதையும் கவனித்தானா என்ற சந்தோஷம் + இதம் ஒரு பக்கமுமாக அவனை பார்த்தாள்.
உதயின் கண்கள் அவளின் முகத்தில் வந்து போன மாற்றங்களை ஆர்வத்துடன் பருகின.
அந்த நேரம், “ஹேய் நந்து, நீ ப்ரியா கிட்ட பேசவே இல்லையே வா,” என்ற துளசியின் குரல் கேட்டது.
அவசரமாக உதய்க்கு அவளின் ‘ட்ரேட்மார்க்’ புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்து விட்டு துளசியின் குரல் வந்த பக்கம் சென்றாள் நந்திதா.
சிறிது இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்து நடந்தான் உதய்.