(Reading time: 6 - 11 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

அவர்கள் இருவரிடையே நடந்த இந்த சின்ன உரையாடல் நந்திதா நினைத்தது போல மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் இல்லை.

   

எப்போதும் தோழி பக்கம் ஒரு கண் வைத்திருந்த துளசி உதய் நந்திதாவின் தட்டில் பொரியல் வைப்பதையும் கவனிக்க தான் செய்தாள்..!

   

காமாட்சியும் ஏதேச்சையாக அவர்கள் பக்கம் பார்த்திருந்தாள். உதயின் மனதில் இருக்கும் விருப்பம் தெரியும் என்பதாலும், கடந்த சில மாதங்களாக நந்திதாவை பற்றி நன்று தெரிந்துக் கொண்டிருந்ததாலும், காமாட்சிக்கு அது சந்தோஷத்தையே கொடுத்தது.

   

எனவே கண்டும் காணாதது போல இருந்தாள்.

   

இவர்கள் இருவரை தவிர காமாட்சியின் அருகே அமர்ந்திருந்த ப்ரியாவும் அவர்கள் இருவரையும் கவனிக்க தான் செய்தாள். அவள் அங்கே வந்ததே அதற்காக தானே!

   

அந்த வீட்டிற்கு வந்தது முதலே உதய் - நந்திதா இருவரின் செயல்களும் அவளுக்கு சுவாரசியத்தை கொடுத்திருந்தது.

   

அவளின் வயதிற்கு அவள் ஒன்றும் ‘லவ் எக்ஸ்பர்ட்’ இல்லை என்றாலும் உதய் – நந்திதா இடையே எதுவோ இருப்பதாக தான் அவளுக்கு தோன்றியது.

   

நந்திதாவை தன்னை மறந்து பார்த்த உதயும், அவனின் பார்வை கண்டு நந்திதாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றமும்... ப்ரியாவின் அருகே உதய் வந்த உடன் நந்திதாவிற்கு வந்த கோபமும்... என்னவோ இருக்கிறது என்று தான் அடித்து சொன்னது...!

   

உதய் மனதில் இருப்பது நந்திதா தான் என்று உறுதி செய்வது எப்படி??? என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

   

இப்போது அவர்கள் இடையே நடந்த பேச்சு முழுவதுமாக கேட்காவிட்டாலும் அந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.