“என் பேரு சரண்யா... சரண்யா கோபி... இல்லை... ஜி.எஸ் என்டர்பிரைசஸ்ல இருந்து சரண்யா கோபி வந்திருக்கேன்னு சொல்லுங்களேன்...”
“கம்பெனினா, ஏதாவது ஆர்டர் விஷயமாக மேடமை பார்க்கனுமா?”
“இல்லை... எனக்கு வேலை வேணும்...”
மிக்க தயக்கத்துடன் சொன்னாள் சரண்யா.
செக்யூரிட்டி முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவளை கேட்டின் உள்ளே வர அனுமதித்தவர், “சரி, இந்த சேர்ல உட்காருங்க, நான் பேசிட்டு சொல்றேன்,” என்றார்.
அவர் சுட்டி காட்டிய சேரில் தயக்கத்துடன் அமர்ந்தாள் சரண்யா. அவளிடம் பேசிய செக்யூரிட்டி தவிர ரெஜிஸ்டரில் எதுவோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்த இன்னொரு செக்யூரிட்டியும் அங்கே இருந்தார். சரண்யாவிற்கு கேட்காததுப் போல அவரிடம் மெல்ல என்னவோ சொல்லி விட்டு சென்றார் அவளிடம் பேசியவர். சரண்யா பார்வையை திருப்பி சற்று தொலைவில் தெரிந்த கட்டிடத்தை வேடிக்கை பார்த்தாள்.
அழகாக பராமரிக்கப் பட்ட சற்றே நீளமான கட்டிடமாக இருந்தது. அவர்களுடைய கம்பெனியுடன் ஒப்பிட்டு பார்த்தால் மூன்று மடங்காவது பெரிதாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. இவ்வளவு பெரிய நிறுவனத்தை தனியாளாக நின்று நடத்த எவ்வளவு திறமை வேண்டும்? எவ்வளவு தைரியம் வேண்டும்?
மைத்ரேயியை சந்திக்கும் முன்பே அவள் மீதான மதிப்பு சரண்யாவினுள் பல மடங்கு அதிகரித்தது.
“எக்ஸ்க்யூஸ் மீ...”
முன்பு எழுதி கொண்டிருந்த செக்யூரிட்டி அவளிடம் பேசுவது புரிந்து அவசரமாக எழுந்து