Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 23 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”ஆஆஆ என்னை விடு, என்னை இறக்கி விடுடா“ என அவனின் முதுகில் அடித்துக் கொண்டே இருந்தாள் சம்யுக்தா அவ்வளவு அடியையும் பொறுத்துக் கொண்டு அவசரமாக தனது வண்டியிடம் சென்று அவளை இறக்கி விட்டு டிரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள அவளும் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள். வண்டியை வேகமாக ரிவர்ஸ் எடுத்து வேறு பக்கமாக ஓட்டினான்
மெயின் ரோடு வரவும் அவனின் வேகம் அதிகரித்தது அவளோ பயத்தில் இருந்தாள், மயக்கம் ஒரு பக்கம், பயம் ஒரு பக்கம் அதில் அவன் வேகமாக செல்வதால் வண்டியும் குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே செல்ல அவள் ஒரு கையால் தில்லையின் கையை பிடித்தபடியே இருந்தாள். அவனும் கியர் மாற்றும் போதெல்லாம் அவளது கை குறுக்கே வர அவனோ சட்டென அவளின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான்
”ஆஆஆ என்ன செய்றீங்க” என அலற
”பேசாம இரு” என பெருங்குரல் எடுத்து கத்தவும் அவள் அமைதியானாள் இப்போது அவனால் சுலபமாக கியர் மாற்ற முடிந்தது. அதனால் ஆக்சிலேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டி விரைவாக வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.
சில அடி தூரத்தில் எதிர்பக்கம் கருணாவின் வண்டி செல்வதைக் கண்டுக் கொண்டான். சித்தனும் அந்த வண்டியின் பின்னால் ஓடுவதைக் கண்டு ஜீப்பின் ஹாரன் அடிக்கவும் அந்த சத்தம் கேட்டு சித்தன் நின்றான், தில்லையின் ஜீப் வருவதைக் கண்டு தயாராக காத்திருந்தான், ஜீப் வந்தது, நிப்பாட்ட கூட நேரமில்லை என்பதால் சித்தன் ஓடியபடியே ஜீப்பின் பக்கவாட்டு பகுதியில் மேல் கூரையில் இருந்த கம்பியை பிடித்தபடி தொங்கிக் கொண்டு பயணப்பட்டான். அதைக் கண்ட சம்யுக்தாவோ அவனுக்கு உதவ எண்ணி தில்லையின் கையை விடுவித்து விட்டு பின்பக்கமாக நகர்ந்து பின்பக்க கதவை திறந்துவிட சித்தனும் பின் பக்கம் ஏறிக் கொண்டு மூச்சு வாங்கினான்.
”உனக்கு ஒண்ணும் ஆகலையே” என சித்தனிடம் அக்கறையாக கேட்டாள் சம்யுக்தா, அதில் அவனோ சிரித்தபடியே
”ஒண்ணும் ஆகலை” என்றான் அவன் மூச்சுவிடுவதைக் கண்டு இரக்கப்பட்டவள் அவனுக்காக