தண்ணீர் கொடுத்தாள். அதைக் கண்ட தில்லையோ
”எனக்கு தண்ணீர் தரனும்னு தோணிச்சா உனக்கு”
”உனக்கு ஏன் தரனும், நீ பாவி, அயோக்கியன், என் கையால உனக்கு சொட்டுத்தண்ணீர் கூட தரமாட்டேன்” என சொல்லவும் அவனுக்கு கோபமே வந்தது.
அந்த கோபத்துடன் கருணாவின் காரை பிடிக்க எண்ணி ஜீப்பின் வேகத்தை கூட்டினான்.
இந்த விசயம் எப்படியோ கடலூரில் உள்ள போலீஸ்காரர்களுக்கு தெரிந்துவிட்டது. அந்த போலீஸ்காரர்களும் நடக்கும் சம்பவத்தை தடுக்கவும், தில்லையையும் கருணாவையும் கைது செய்ய அவர்கள் தனியாக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்தார்கள். அதில் தில்லைக்காக வேலை செய்யும் சில விசுவாச போலீஸ்களும் இருந்தார்கள் அவர்கள் தில்லைக்கு மட்டுமே உதவி செய்ய எண்ணி அவர்களும் வண்டியில் வந்தார்கள்.
தில்லையின் விசுவாசியான கடலூர் போலீஸ் அதிகாரி ஒருவன் தில்லைக்கு போன் செய்து நிலைமை என்னவென்பதை விசாரித்தான்.
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
என ரிங்டோன் ஒலிக்க வண்டியை ஓட்டியபடியே தில்லையால் பேச முடியாத காரணத்தால் சம்யுக்தாவிடம் உதவி நாடினான்
”சம்யுக்தா போன் எடுத்து பேசு”
”நானா நான் எப்படி“
”அவங்க சொல்றதை எனக்கு சொல்லு, நான் சொல்றதை அவங்களுக்கு சொல்லு, போதும்