(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

காட்டமாக சொல்ல அவளுக்கு அலுப்பே வந்தது.

   

 பின்னால் வந்த போலீஸ் வண்டியை தொடர்ந்து இன்னொரு போலீஸ் வண்டியும் வந்தது. அதைக் கண்ட சம்யுக்தா அமைதியானாள். ஆனால் சித்தனோ

   

”அண்ணா போலீஸ் வருது” என சொல்ல அதற்கு அவளோ

   

”அதுவும் இவரோட விசுவாசியாதான் இருக்கனும், ஏன் பயப்படறீங்க” என சொல்ல அதற்கு தில்லையோ

   

”இல்லை அவங்க என் விசுவாசி கிடையாது, என்னையும் கருணாவையும் பிடிக்க வந்திருக்காங்க”

   

”அப்ப நீ மாட்டிக்குவியா” என ஆர்வமாக கேட்க

   

”ரொம்ப ஆசைப்படாத, இப்ப எனக்கு போன் பண்ண போலீஸ்க்கு நீ போன் பண்ணி அவங்களுக்கு பின்னாடி வர்ற போலீஸை திசை திருப்பச் சொல்லு சீக்கிரம்”

   

”நானா முடியாது, நான் செய்ய மாட்டேன், இது தப்பு, உண்மையான போலீஸ் தன் கடைமையை செய்யறதை நான் தடுக்க மாட்டேன்” என சொல்ல தில்லையோ

   

”சித்தா நீ செல்போன் வாங்கிப் பேசு” என சொல்ல அவனும் சம்யுக்தாவிடம் இருந்து போனை வாங்க முயல அவளோ முடியாது என தடுக்க அதில் தில்லையே அவளிடம் இருந்து போனை வாங்கி சித்தனிடம் தந்து

   

”சீக்கிரம் பேசித் தொலைடா” என கத்த சித்தனும் தில்லை சொன்னது போலவே பேசிவிட்டு ஓய்ந்தான்.

   

அதில் சிறிது நேரத்தில் பின்னால் வந்த போலீஸ் வண்டி வேறு பக்கமாக சென்றது. அவனுக்கு பாதுகாப்பு தர வந்த வண்டி மட்டுமே தொடர்ந்து வந்தது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.