சீக்கிரம்” என அதட்ட அவளும் சரியென்றாள். அதில் அவனும் தனது பேக்கெட்டில் இருந்த போனை அவளிடம் தந்தான். அவளும் உடனே ஆன் செய்து
”ஹலோ யார் பேசறது” என கேட்க மறுபக்கமோ
”நாங்க கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன்? நீங்க யாரு தில்லை எங்க?”
”தில்லையா அவர் இங்கதான் இருக்காரு, என்ன விசயம் சொல்லுங்க நான் அவருக்கு சொல்றேன்”
”அவர்கிட்ட போன் கொடுங்க நாங்க பேசிக்கிறோம்”
”இல்லை அவர் பிசியா வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காரு, முன்னாடி கருணாவோட வண்டி போகுது, அந்த வண்டியை பிடிக்கனுமாம், அவரால இப்ப பேச முடியாது எதுவாயிருந்தாலும் சொல்லுங்க, நானே சொல்றேன்” என சொல்ல அவர்களோ
”எந்த பக்கம் கருணாவோட வண்டி போகுதுன்னு கேளுங்க” என கேட்க அவளும் தில்லையிடம் அதையே வார்த்தை மாறாமல் சொல்ல தில்லையும் வழியைச் சொன்னான்.
அதில் அவர்களும் போனை கட் செய்துவிட்டனர்.
”போன் கட்டாயிடுச்சே“
”அவங்களே வருவாங்க, நீ அமைதியா இரு” என சொல்ல அவளும் அமைதியாக இருந்தாள்.
சிறிது நேரத்தில் தில்லையின் ஜீப்பிற்கு பின்னால் ஒரு போலீஸ் வண்டி வரவும் அதைக் கண்ட சம்யுக்தாவோ
”போலீஸ் வருது நீ மாட்டிக்கப் போற“
”லூசு அது என் விசுவாசி, எனக்கு பாதுகாப்பு தர்றதுக்காக வர்றான் நீ பேசாம இரு” என