(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

இதில் கருணாவின் வண்டியிடம் நெருங்கிவிட்டான் தில்லை. கருணாவும் கவனித்துவிட்டு தன் வண்டியை தில்லையின் வண்டி மீது இடிக்க வர அதைப் புரிந்துக் கொண்ட தில்லையும் முன்னோக்கி தன் வண்டியை செலுத்தினான். இதில் முன்னால் தில்லையின் வண்டியும் நடுவில் கருணாவின் வண்டியும் பின்பக்கம் போலீஸ் விசுவாசியின் வண்டியும் ஒரே பாதையில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தது.

   

கருணாவோ என்ன செய்வதென யோசிப்பதற்குள் தில்லையே வண்டியை திருப்பி ரோடின் குறுக்கே நிப்பாட்ட அதில் கருணாவின் வண்டியும் சடன் பிரேக்கிட்டு நின்றது. கூடவே போலீஸ் வண்டியும் கருணாவின் வண்டியை இடித்தபடியே நின்றது.

   

இதில் தில்லை அவசரமாக வண்டியை விட்டு இறங்கி ஓடி வந்தான், சித்தனும் வந்தான் போலீஸ் வந்தது. மூவருமாக சேர்ந்து கருணாவின் வண்டியை சுற்றி வளைத்தார்கள், மூவரிடமும் துப்பாக்கி இருந்தபடியால் அதை காட்டியே வண்டிக்குள் இருந்தவர்களை வெளியே வரவழைத்தான் தில்லை. அவர்களும் வெளியேறி நின்றார்கள், அவர்களிடமும் துப்பாக்கி, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும் இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் இவர்களை மிரட்ட தில்லைக்கு பொறுமையே போனது. 

   

தனக்கு குண்டடி பட்டாலும் பரவாயில்லை என நினைத்து துணிந்து கருணாவை பிடிக்க முயற்சிக்க அவனது ஆட்கள் தங்கள் கையில் இருந்த கத்தி, அரிவாளால் தில்லையின் உடலை காயப்படுத்த அதனால் ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்டு கருணாவை பிடித்து அடிக்க ஆரம்பித்தான். இதில் போலீசும், சித்தனும் மற்ற 2 ஆட்களை பிடித்துக் கொண்டனர்.

   

கருணா மயக்கமடையும் வரை அவனை நன்றாக அடித்து போட்டுவிட அவனும் மயங்கி சரிந்தான். அதைக் கண்ட போலீசோ

   

”தில்லை இவனை என்ன செய்யப் போற கொல்லப்போறியா இல்லை உயிரோட விடப்போறியா“

   

”இவனை என்ன செய்றதுன்னு சிதம்பரத்தில வைச்சி யோசிக்கிறேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.